Yahya

இஸ்லாமிய ஆடை விதிமுறைகளை மீறுபவர்கள் இனி கைது செய்யப்பட மாட்டர்கள். #ஈரான்


ஈரானில் இஸ்லாமிய விதிமுறைப்படி (ஹிஜாப்) ஆடை அணியாத பெண்கள் இதுவரை காலமும்
கைது செய்யப்பட்டு வந்த நிலையில் இனிமேல் அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்களென ஈரான் பொலிஸ் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெஹ்ரான் போலீஸார் தரப்பில், 
"இஸ்லாமிய ஆடை விதிமுறைகளை மீறுபவர்கள் இனி கைது செய்யப்பட மாட்டர்கள். நீதிமன்ற வழக்குகளும் அவர்கள் மீது பதியப்படாது, ஆனால் அவர்கள் பொலிஸாரின் வழிகாட்டல் பயிற்சி வகுப்பில் கட்டாயம் கலந்து கொள்ளுதல் வேண்டும்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக ஈரானில் பெண்கள் தங்கள் முடி உட்பட முற்றிலும் மறைக்கப்பட்ட (ஆபாசமற்ற) தளர்வான ஆடையைகளையே அணிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:
ஈரானில் ஆடை கட்டுப்பாட்டு தடை நீக்கம் என்று இந்திய ஊடகங்களால் பரப்பப்பட்டு வரும் செய்திகள் பொய்யானதாகும்.
இஸ்லாமிய ஆடை விதிமுறைகளை மீறுபவர்கள் இனி கைது செய்யப்பட மாட்டர்கள். #ஈரான்  இஸ்லாமிய ஆடை விதிமுறைகளை மீறுபவர்கள் இனி கைது செய்யப்பட மாட்டர்கள். #ஈரான் Reviewed by Euro Fashions on 12/30/2017 06:42:00 PM Rating: 5