Yahya

நண்பனும், துரோகியும், எதிரியும்....!!


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

எதிரிகள் 9 நாடுகள் :

அமெரிக்கா, இஸ்ரேல், கௌதம்வாலா, ஹன்துரஸ், மார்ஷல் ஐலாந்து, பெளு, டோகோ, நவ்ரு,
மைக்ரோனேசியா ஆகிய 9 நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

ஜப்பான், வியட்நாம், ஈராக் உள்ளிட்ட பல நாடுகள் மீது அமெரிக்கா அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதுபோல் கௌதம்வாலா மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிலிருந்து கௌதம்வாலா அமெரிக்காவுக்கு அடிமையாகவே இருந்து வருகிறது.

அமெரிக்காவையும், இஸ்ரேலையும் பார்க்கும் அதே அளவுகோளிலேயே இந்த 9 நாடுகளையும் நாம் பார்க்க வேண்டும்.

துரோகிகள் 35 நாடுகள் :

அண்டிகா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பஹமாஸ், பெனின், போஸ்னியா, கேமரூன், கனடா, க்ரோடியா, செக் குடியரசு, டொமினியன் குடியரசு, கிண்ணியா, பிஜி, ஹைத்தி, ஹங்கேரி, ஜமைக்கா, கிரிபடி, லத்வியா, லெசோதோ, மாலவி, மெக்ஸிகோ, பனாமா, பாராகுவே, பிலிப்பைன்ஸ், போலந்து, ரொமானியா, ருவாண்டா, சாலமன் ஐலாந்து, தெற்கு சூடான், டோபாகோ, துவாளு, உகாண்டா, வனுட்டு ஆகிய 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஒன்னு நமக்கு நண்பனாக இருக்க வேண்டும் அல்லது நமக்கு எதிரியாக இருக்க வேண்டும்

அது என்ன நடுநிலை என்பது புரியவில்லை ?

ஜெருசலேம் யாருக்கு சொந்தம் என்பது உலக நாடுகள் அனைத்துக்கும் தெளிவாக தெரியும் எனும்போது சத்தியத்திற்கு ஆதரவாக சான்று பகராமல் சத்தியத்தையும், அசத்தியத்தையும் ஒரே அளவுகோலில் வைத்து பார்த்துள்ளார்கள்.

இவர்கள் எதிரியை விட பேராபத்தானவர்கள் எப்போது வேண்டுமானாலும் நம் முதுகில் குத்துவார்கள் என்பதால் இவர்களை நடுநிலை என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் எதிரிகள் என்ற லிஸ்டிலேயே நாம் வைத்திருக்க வேண்டும்.

நண்பர்கள் 128 நாடுகள் :

பிரிட்டன், சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, பின்லாந்து, தாய்லாந்து, சிங்கப்பூர், டென்மார்க், வடகொரியா, ஈக்வெடார், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நேபாள், வியட்நாம், ஜிம்பாபே, வியட்நாம், அங்கோலா, சவூதி அரேபியா, துருக்கி, லிபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 128 நாடுகள் பாலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தால் நிதியுதவி நிறுத்தப்படும் என்று டொனால்ட் டிரம்ப் வெட்கமில்லாமல் பகிரங்கமாக மிரட்டியும் மிரட்டலை தூக்கி வீசிவிட்டு கொஞ்சம் கூட அசராமல் 128 நாடுகள் பாலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
நண்பனும், துரோகியும், எதிரியும்....!! நண்பனும், துரோகியும், எதிரியும்....!! Reviewed by Madawala News on 12/23/2017 02:55:00 PM Rating: 5