Yahya

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அமெரிக்க அறிவிப்பை எதிர்த்து பேரணி நடத்துவோம். இலங்கை அறிவிப்பு.

இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகத்தை ஜெரூஸலம் நகருக்கு மாற்றுவதில்லை எனவும், ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக இலங்கை ஏற்றுக்கொள்வதில்லை எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.



இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.



இதேவேளை, இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை அங்கீகரித்து அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து பலஸ்தீன நட்புறவு அமைப்புகளும் இணைந்து பேரணியொன்றை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணிக்கு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார். DC

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அமெரிக்க அறிவிப்பை எதிர்த்து பேரணி நடத்துவோம். இலங்கை அறிவிப்பு. இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அமெரிக்க அறிவிப்பை எதிர்த்து பேரணி நடத்துவோம். இலங்கை அறிவிப்பு. Reviewed by Euro Fashions on 12/13/2017 03:48:00 PM Rating: 5