Yahya

கருணா அம்மானாகிய நான் எவருடைய வீடுகளுக்கும் சென்று எந்தப் பிள்ளைகளையும் பிடிக்கவில்லை.


விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து எவரும் பலியாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் அனைத்து விடு தலைதலைப்புலி உறுப்பினர்களையும் நான் வீடுகளுக்கு அனுப்பி வைத்தேன்.

அவ்வாறு அப்போது அன்றைய வீரர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கா விட்டால் அதிகளவானவர்கள் உயிரிழந்திருப்பர். இவ்வாறு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித் துள்ளார்.


மட்டக்களப்பிலிருந்து அப்பாவிப் பிள்ளைகள் காணாமலாக்கப்பட் டதற்குக் கருணாவே காரணம் என அண்மையில் ஊடகங்களில் செய்து வெளிவந்துள்ளன.

 இவ்விடயம் தொடர்பில் நேற்று புதன்கிழமை (13) ஊடகங்களுக்கு கருத்துத் தெரி விக்கையிலே அவர் இவ்வாறு குறிப் பிட்டார்.

நான் யாரையும் பலவந்தமாக அக்காலப் பகுதியில் போராட் டத்திற்கு இணைக் கவில்லை, அவ்வாறு எவருடைய வீடுகளுக்கும் நான் சென்று எந்தப் பிள்ளைகளையும் பிடிக்கவி ல்லை, எனக்கும் அதற்கும் எதுவித சம்மந்தமுமில்லை. தற்போதைய தேர்தல் காலத்தில் திட்டமிட்டு சில தீய சக்திகள் இவ்வாறான பிரச்சாரங்களுக்கு பெற்றோரை உசார்ப்படுத்தி விடுகின்றார்கள்.


இதனை உண்மையிலேயே நான் முற்றாக மறுக்கின்றேன். கருணா அம்மானாகிய நான் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன்மை கருத்தித்தான் போராளிகளை வீட் டுக்கு அனுப்பி வைத்தேன்.

மட் டக்களப்பிலிருந்து அப்பாவிப் பிள்ளைகள் காணாமலாக்கப்பட்ட தற்குக் கருணாவே காரணம் என்பது தவறான தகவலாகும். இதனை நான் வன்மையாக கண்டிக்கின் றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருணா அம்மானாகிய நான் எவருடைய வீடுகளுக்கும் சென்று எந்தப் பிள்ளைகளையும் பிடிக்கவில்லை. கருணா அம்மானாகிய நான் எவருடைய வீடுகளுக்கும் சென்று எந்தப் பிள்ளைகளையும் பிடிக்கவில்லை. Reviewed by Madawala News on 12/14/2017 12:01:00 PM Rating: 5