Kidny

Kidny

சிறு­மி­களின் கத்னா விவகாரம்.. நீதி­ய­மைச்சரிடம் முறையிட்ட பெண்கள் அமைப்பு.


சிறு­மி­களின் பிறப்­பு­றுப்பு சிதைக்­கப்­படும் “கத்னா” சடங்­கை தடை செய்­யு­மாறு, பிறப்­பு­றுப்பு சிதைக்­கப்­பட்ட இலங்கைப் பெண்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் குழு­வொன்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இலங்­கையில் சில முஸ்லிம் குழுக்­களால் இர­க­சி­ய­மாக மேற்­கொள்­ளப்­படுவதாக கூறப்படும் கத்னா சடங்­குக்கு எதி­ராக இக்­கு­ழு­வினர் குரல்­கொ­டுத்­த­தை­ய­டுத்து, தன்னை சந்­திப்­ப­தற்கு இக்­கு­ழுவின் நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள அழைப்பு விடுத்­தி­ருந்தார் என ரோய்ட்டர்ஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. ( அச்செய்தியை வாசிக்கhttps://goo.gl/Xm2mdm  )

கத்­னா­வினால் பாதிக்­கப்­பட்ட பெண்கள், இச்­ச­டங்கை தடை­செய்­யு­மாறு கோரு­கின்­றனர் என இக்­கு­ழுவின் சட்­டத்­த­ரணி இர்­மிஸா தேகல் தெரி­வித்­துள்ளார்.

கத்னா சடங்­களை பெண்­களின் பிறப்­பு­றுப்பு சிதைப்பு நட­வ­டிக்­கை­யாக (FGN) உலக சுகா­தார நிறு­வனம் வகைப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனினும், கத்­னாவை ஆத­ரிப்போர், இது பிறப்­பு­றுப்பு சிதைப்பு நட­வ­டிக்கை அல்ல எனக் கூறு­கின்­றனர்.

கத்­னாவில் தமக்கு ஏற்­பட்ட எத்­த­கைய நீண்­ட­கால உடல், உள பாதிப்­புகள் ஏற்­பட்­டன என்­பதை இலங்கை அதி­கா­ரி­க­ளிடம் சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கை­யொன்றில் பெண்கள் பலர் தெரி­வித்­துள்­ளனர் எனவும் ரோய்ட்டர்ஸ் தெரி­வித்­துள்­ளது.

இச்­ச­டங்­கினால் ஒரே­யொரு சிறுமி பாதிக்­கப்­பட்­டாலும் அது, மேற்­படி சடங்கை தடை செய்­வ­தற்குப் போது­மா­னது என ரோய்ட்­டர்­ஸிடம் தம்மை இனங்­காட்ட விரும்­பாத பெண் ­ணொருவர் தெரி­வித்­துள்ளார்.

தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையின் தலை­வ­ரான மெரினி டி லிவேரா, அமைச்­ச­ருக்கும் மேற்படி செயற்பாட்டாளர்கள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பை வரவேற்றுள் ளதுடன், இவ்விடயம் தொடர்பில் தேசிய ரீதியிலான விவாதங்கள் நடைபெற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
சிறு­மி­களின் கத்னா விவகாரம்.. நீதி­ய­மைச்சரிடம் முறையிட்ட பெண்கள் அமைப்பு. சிறு­மி­களின் கத்னா விவகாரம்..  நீதி­ய­மைச்சரிடம்  முறையிட்ட  பெண்கள் அமைப்பு. Reviewed by Madawala News on 12/07/2017 11:30:00 AM Rating: 5