Yahya

நான் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை.


நான் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லையென முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலங்களில் தாஜூதீன் மற்றும் லசந்த விக்ரமதுங்கவின் உடல்கள் தோண்டியெடுக்கப்படுவது போன்று தாம் ஐக்கிய தேசிய கட்சியில் இணைவதாக பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.

எனினும் தமக்கு அவ்வாறு எந்த நோக்கமும் இல்லையென கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
நான் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. நான் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. Reviewed by Madawala News on 12/24/2017 11:44:00 PM Rating: 5