Kidny

Kidny

சிவனொளிபாத மலையை தரிசிக்க வந்தவர்கள் கஞ்சாவுடன் கைது.


சிவனொளிபாதமலை பருவகாலம் நேற்று (03) உதயமான பௌர்ணமி தினத்துடன் ஆரம்பமானது.

ஆரம்பமான முதல் தினத்திலிலேயே 7.55 கிராம் கஞ்சா போதை பொருள் கொண்டு சென்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

நோட்டன் பிரிஜ், தியகல பிரதேசங்களில் வைத்து ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாண கலால் திணைக்கள ஆணையாளர் காமினி அதிகாரி, நுவரெலியா கலால் திணைக்கள அதிகாரி உபுல் செனவிரத்தன, ஹட்டன் கலால திணைக்கள அதிகாரி திலக்கரத்னவின் வழி காட்டலில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் புஸ்ஸால்லாவ பகுதியில் இருந்து சிவனொளிபாத மலையினை தரிசிக்க வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்பட்ள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை இன்று ஹட்டன் நீதவான் முன்னலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் கலால் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சிவனொளிபாத மலையை தரிசிக்க வந்தவர்கள் கஞ்சாவுடன் கைது. சிவனொளிபாத மலையை தரிசிக்க வந்தவர்கள் கஞ்சாவுடன் கைது. Reviewed by Madawala News on 12/04/2017 11:02:00 AM Rating: 5