Yahya

கலண்டரில் மதத்தை இழிவு படுத்தியதாக காத்தான்குடி கருவாட்டு வியாபாரி தம்புள்ளயில் கைது. Kr

மதத்தை அவமானப்படுத்தும் வகையில் 2018ஆம் ஆண்டுக்கான கலண்டரை அச்சிட்டு விநியோகித்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


எதிர்வரும் 3ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புளை நீதவான் நீதிபதி கோசல பண்டார இளங்கசிங்க உத்தரவிட்டுள்ளார்.


தம்புளை பொருளாதார வர்த்தக மையத்தில் கருவாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் சந்தேகநபர்  காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்தேகநபர் தொடர்பில் தம்புளை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய குறித்த நபரின் வர்த்தக நிலையம் சுற்றி வளைக்கப்பட்டதுடன், இங்கு விநியோகிப்பதுக்காக வைக்கப்பட்டிருந்த கலண்டர்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதே வேளை சென்ற வாரம் இரத்தினபுரியில் கோழிக்கடை வர்த்தகர் கலண்டரில் ருவன்வெலிசாய படத்தை அச்சடித்து கைதானது குறிப்பிடத்தக்கது. 

கலண்டரில் மதத்தை இழிவு படுத்தியதாக காத்தான்குடி கருவாட்டு வியாபாரி தம்புள்ளயில் கைது. Kr கலண்டரில் மதத்தை இழிவு படுத்தியதாக காத்தான்குடி கருவாட்டு வியாபாரி தம்புள்ளயில் கைது. Kr Reviewed by Euro Fashions on 12/31/2017 06:36:00 PM Rating: 5