Kidny

Kidny

(படங்கள்) மடவளை ஹாதிமுல் உம்மா நவன்புரி அமைப்பின் மீலாத் ஞாபகமூட்டல் மற்றும் ‘டொப் டுவண்டி’ வருடாந்த பரிசளிப்பு வைபவம் .


(ஜே.எம். ஹாபீஸ்)
மடவளையில் இயங்கும் சமூக சேவை நிறுவனமான ‘ஹாதிமுல் உம்மா நவன்புரி அமைப்பு’
ஒழுங்கு செய்த நபி பெருமான் முஹம்மத் (ஸல்) பிறந்த தின வைபவமான மீலாத் ஞாபகமூட்டல் மற்றும் ‘டொப் டுவண்டி’ வருடாந்த பரிசளிப்பு வைபவம் என்பன மடவளை மதீனா மத்திய கல்லூரி அஷ்ரப் கேட்போர் கூடத்தில் (1.12.2017) இரவு) இடம் பெற்றது.


அதிதிகளாக மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஜெய்னுள் ஆப்தீன் லாபிர், பாத்ததும்பறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சுதர்மா வெலகெதர, மடவளை ஜாமியுல் கைராத் பள்ளி பரிபாலன சபைத் தலைவர் ஏ.எஸ்.எம்.கியாஸ், குருநாகர் நிப்போன் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் டி.எஸ்.எம். நிசைஹர் உற்பட பலர் கலந்து கொண்டனர்.


மடவளையில் கல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்தவர்கள் எனக் கருதப்படும் 20 பேர்களுக்கான விருது வழங்கும் வைபவமும் இடம் பெற்றது.

அக்குறணை அர்றஹ்மானிய்யா அராபிக் கலாசாலை விரிவுரையாளர் மௌலவி எஸ்.எம்.இஸ்மத் (தீனி) விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டார்.
(படங்கள்) மடவளை ஹாதிமுல் உம்மா நவன்புரி அமைப்பின் மீலாத் ஞாபகமூட்டல் மற்றும் ‘டொப் டுவண்டி’ வருடாந்த பரிசளிப்பு வைபவம் . (படங்கள்) மடவளை ஹாதிமுல் உம்மா நவன்புரி அமைப்பின்  மீலாத் ஞாபகமூட்டல்  மற்றும் ‘டொப் டுவண்டி’ வருடாந்த பரிசளிப்பு வைபவம் . Reviewed by Madawala News on 12/02/2017 09:35:00 AM Rating: 5