Kidny

Kidny

படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐந்து இலங்கை மீனவர்களை ஈரானிய கப்பல் காப்பாற்றியது.


படகு கவிழந்த நிலையில் இந்தியக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐந்து இலங்கை மீனவர்களை ஈரானிய எண்ணெய்க் கப்பல் ஒன்று காப்பாற்றியுள்ளது.

ஈரான் ஊடகமான இர்னா செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ( http://www.irna.ir/en/News/82751344/ )

பெரும்கடலில் படகு கவிழந்த நிலையில் அதன் மீது ஏறி நின்ற நிலையில் தம்மைக் காப்பாற்றுமாறு உதவி ஐந்து இலங்கை மீனவர்களையும் ஈரானிய கப்பல் காப்பாற்றியுள்ளது.

கடும் மழை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் இலங்கை மீனவர்களை மீட்கும் போராட்டம் ஐந்து மணி நேரம் நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் குறித்து ஈரானிய எண்ணெய்க் கப்பலின் தலைவர் மஹ்மூத் பக்கெஸ்தானி கூறுகையில்,

குறித்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரும் 2-3 நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர்.

மீனவர்கள் பாதுகாப்பாகவும், பேசக்கூடிய நிலையிலும் இருப்பதாகவும், நாளை மறுதினம் இவர்களை சப்ஹார் துறைமுகத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மீட்கப்பட்ட மீனவர்களை அடையாளம்ட காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐந்து இலங்கை மீனவர்களை ஈரானிய கப்பல் காப்பாற்றியது. படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐந்து இலங்கை மீனவர்களை ஈரானிய கப்பல் காப்பாற்றியது. Reviewed by Madawala News on 12/05/2017 10:17:00 AM Rating: 5