Yahya

சட்டவிரோதமாக சாராயம் விற்று வந்தவர் கைது. #மூதூர்


(ஹஸ்பர் ஏ ஹலீம்) 
மூதூரில் சட்டவிரோதமாக சாராயம் விற்று வந்தவர் கைது.

 திருகோணமலை மாவட்டம் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைச்சேனை பகுதியில் அரச சாராயத்தை அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக விற்று வந்த ஒருவர் நேற்று(14) இரவு வியாழக் கிழமை 7.40 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் அக்கரைச் சேனை,கேணிக்காடு,மூதூர்-01 எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட (வயது 30 ) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரிடம் இருந்து ஒவ்வொன்றும் 750 மில்லி லீற்றர் கொண்ட ஆறு முழு போத்தல்கள் உட்பட மொத்தமாக 4680 மில்லி லீற்றர் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பொலிஸாருக் கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றிவலைப்பை மேற்கொண்ட போது விற்பனை செய்து வந்தவரை அவரது வீட்டில் வைத்து ஒருவர் மூலமாக பொலிஸார் வாங்கச் செய்து சோதனையிட்டதன்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

சுற்றிவலைப்பின் போது மேலதிக தேடுதல்களை மேற்கொண்டபோதும் தனது வீட்டுக்குள் விறகினால் சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

இச் சுற்றிவலைப்பில் பொலிஸ் சார்ஜன்ட்12793 அத்துகோரள தலைமையிலான ரஜப்53658,தௌபீக்53876,சியாம்73 523,ஜெயசிங்க80836 போன்ற பொலிஸ் குழுவினரின் முயற்சியினால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது .கைது செய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட சாராயத்துடனான போத்தல்களையும் மூதூர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரனைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் சார்ஜன்ட் அத்துகோரள மேலும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக சாராயம் விற்று வந்தவர் கைது. #மூதூர் சட்டவிரோதமாக சாராயம் விற்று வந்தவர் கைது. #மூதூர் Reviewed by Madawala News on 12/15/2017 09:23:00 AM Rating: 5