Yahya

எமக்கு UNP யுடனேயே தேர்தல் போட்டி உள்ளது. சுதந்திரக்கட்சியுடன் இல்லை. (சம்பந்தனிடம் நேற்று ராஜபக்ச தெரிவித்தவை)


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் எமக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே பிரச்சினை கள் உள்ளன. அவர்களுடன் தான் எமக்கு தேர்தல் போட்டியும் உள்ளது என்று எதிர்க் கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனி டத்தில் முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ நேரடியாகத் தெரிவித்துள்ளார்.

சுகவீனமுற்றிருந்த நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனை பார்வையிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை முற்பகல் 10.30மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார். இதன்போது அவருடைய மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, மற்றும் உதித்த லொக்குபண்டார ஆகியோரும் உடனிருந்துள்ளனர்.

சுமார் அரைமணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பின்,

ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனிடத்தில் உடல் நிலைமைகள் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பில் குசலம் விசாரித்திருந்தார்.

அதனையடுத்து கடந்த கால விடயங்கள் தொடர்பில் சில நினைவுப் பகிர்வுகளையும் இருவரும் செய்திருந்தனர். தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவர் தனது புதல்வியை மகிந்த ராஜபக்ஷவுக்கு அறிமுகம் செய்து வைத்ததோடு, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்களை செய்தனர்.

குறிப்பாக திருகோணமலையில் எவ்வாறு நிலைமைகள் காணப்படுகின்றன என மகிந்த ராஜபக்ஷ முதலில் சம்பந்தனிடத்தில் கேள்விஎழுப்பியுள்ளார். அதனையடுத்து சம்பந்தன், நீங்கள் ஏன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவில்லை. பிரதான கட்சியொன்றினுள் பிளவுகள் ஏற்படுவது ஆரோக்கியமான விடயமல்ல என்று குறிப்பிட்டார்.

இச்சமயத்தில், மகிந்த ராஜபக்ஷ, எனக்கு சுதந்திரக் கட்சியுடன் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. நாங்கள் இயலுமானவரையில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கே முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.

அவர்களும்(மைத்திரி தரப்பும்) முயற்சிகளை எடுத்திருந்தார்கள். ஆனால் முடியாது போயிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டாக இணைந்திருக்கும் வரையில் எம்மால் அவர்களுடன் இணைய முடியாது.

அவ்வாறு இணைந்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தாக ஆகிவிடும். எமது மக்கள் அதனை விரும்பவில்லை. உள்ளுராட்சி மன்றங்களில் எமக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே தேர்தல் போட்டி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து விரைவில் சம்பந்தன் குணமடைவதற்காக பிரார்த்திப்பதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்து விட்டு அங்கிருந்து மகிந்த ராஜபக்ஷ வௌியேறிச் சென்றிருந்ததார்.
எமக்கு UNP யுடனேயே தேர்தல் போட்டி உள்ளது. சுதந்திரக்கட்சியுடன் இல்லை. (சம்பந்தனிடம் நேற்று ராஜபக்ச தெரிவித்தவை) எமக்கு UNP யுடனேயே தேர்தல் போட்டி உள்ளது. சுதந்திரக்கட்சியுடன் இல்லை. (சம்பந்தனிடம் நேற்று  ராஜபக்ச தெரிவித்தவை) Reviewed by Madawala News on 12/26/2017 01:20:00 PM Rating: 5