Yahya

சு.க தலைமைப் பதவியை வழங்குவதற்கு மைத்திரி முட்டாளும் அல்ல. அவ்வாறு வழங்கியும் நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல.


தலைமைப் பதவியை வழங்குவதற்கு அவர் முட்டாளும் அல்ல அவ்வாறு வழங்கியும் நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சோடிக்கப்பட்ட பொய்யாக பல கருத்துக்கள் உலாவுவதாகவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து ஊடகவியலாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற் கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து உள்ளூ ராட்சிமன்றங்களுக்குமான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக் களை சிறந்த வகையில் தாக்கல் செய்துள்ளது.

 திகதி மற்றும் ஆண் பெண் போன்ற சிறிய தவறுகளை மையப்படுத்தி குறிப்பிட்ட சில பகுதிகளில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட் டுள்ளன.

வீரக்கெட்டியவில் மூவர் நீக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பல்வேறு நெருக்க டிகள் காணப்படுகின்றன.

ஆனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். சுதந்திரக் கட் சியுடன் சமரச பேச்சுக்களை முன்னெடுக்குகையில் அதனை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டதாகக் கூறுகின்றனர்.

இதில் எவ்விதமான உண்மைத் தன்மையும் இல்லை. சுதந்திர கட் சியின் தலைவர் பதவியை தருவதாக கூறியதாகவும் கூறுகின்றனர்.

அவ்வாறு வழங்குவதற்கு அவர்கள் முட்டாள்களும் அல்ல. அதேபோன்று அவ்வாறா னதொரு வாய்ப்பு வரும் போது நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல. எனவே நன்கு சோடிக்கப்பட்ட பொய்யாகவே அவ்வாறான கருத்துக்கள் காணப்படுகின்றன என தெரிவித்தார்.
சு.க தலைமைப் பதவியை வழங்குவதற்கு மைத்திரி முட்டாளும் அல்ல. அவ்வாறு வழங்கியும் நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல. சு.க தலைமைப் பதவியை வழங்குவதற்கு மைத்திரி முட்டாளும் அல்ல. அவ்வாறு வழங்கியும் நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல. Reviewed by Madawala News on 12/20/2017 11:52:00 AM Rating: 5