Yahya

குருநாகல், மல்லவபிடிய வட்டாரத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து அறிவுரை வழங்கிய ஜும்மா மஸ்ஜித் நிர்வாகத்தினர்.


குருநாகல் பிரதேச சபைக்கு மல்லவபிடிய வட்டாரத்திலிருந்து போட்டியிடும் அபேட்சகர்கள் மல்லவபிடிய ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபையினரின் அழைப்பின் பேரில் நேற்று இரவு (27.12.2017) மல்லவபிடிய ஜும்மா  மஸ்ஜிதில் சந்தித்தனர்.

இதன் போது ஜனாப் பாஹிம் (UNP) ,
ஜனாப் பாருக் (SLFP) ,
ஜனாப் அமான் (PJP) ,
ஜனாப் முஜிபுர் ரஹ்மான் (SLMC)
ஜனாப் B.A பாருக் (JVP)
ஆகிய சகோதரர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.


 தேர்தல் காலத்தில் எவ்விதமான பிரச்சினையுமற்ற வகையில்  தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வது சம்பந்தமாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

அனைவரும் இதற்காக தங்களுடைய பங்களிப்பை வழங்குவதாக கூறினர்.
அனைத்து வேட்பாளர்களும் கலநதுரையாடல் தொடர்பாக திருப்தியுற்றதுடன் அனைவரும் முஸாபஹா செய்தவர்களாக சென்றனர்.

தகவல்: S.A.P.L. முஹம்மத்
குருநாகல், மல்லவபிடிய வட்டாரத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து அறிவுரை வழங்கிய ஜும்மா மஸ்ஜித் நிர்வாகத்தினர். குருநாகல், மல்லவபிடிய வட்டாரத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து அறிவுரை  வழங்கிய ஜும்மா மஸ்ஜித் நிர்வாகத்தினர். Reviewed by Madawala News on 12/28/2017 09:39:00 PM Rating: 5