Yahya

கணவனை இழந்து நான்கு பிள்ளைகளுடன் கஷ்டப்பட்ட தாயும். பிரதேச பொலிசாரின் கருணையும். நெகிழ்ச்சி சம்பவம்.


மஸ்கெலியா, முள்ளுகாமம் தோட்டத்தில், கணவனை இழந்து நான்கு பிள்ளைகளுடன் வாழ்க்கையை நடத்திவரும் தாய் ஒருவருக்கு மஸ்கெலியா பொலிஸார் வீடொன்றை அமைத்து அதனை கையளித்துள்ளனர்.

சர்வமத பிரார்த்தனைகளுடன் குறித்த வீட்டினை கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தனது பிள்ளைகளை வளர்த்து வரும் குறித்த தாய்க்கு சமூக நலன் விரும்பிகளின் உதவியுடன் வாழ்வதற்கு வீடும், வாழ்வாதாரத்திற்கு கோழி பன்னையும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

மத்தியமாகாண சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் உதவியுடன் மூன்று வருடகாலமாக வாழ்க்கையை கொண்டு செல்லும் குறித்த தாய் தொடர்பில் நல்லத்தண்ணி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் இவ்வாறு வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக உடுகம சூர்யவின் ஆலோசனைக்கமைய மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பிரணாந்து, மஸ்கெலியா லயன்ஸ் கிளப் மற்றும் லக்ஷபான தோட்ட முகாமையாளர் ஆகியோரால் இந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த தாய் தனது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதற்காக கோழிப்பன்னை ஒன்றினையும் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கணவனை இழந்து நான்கு பிள்ளைகளுடன் கஷ்டப்பட்ட தாயும். பிரதேச பொலிசாரின் கருணையும். நெகிழ்ச்சி சம்பவம். கணவனை இழந்து நான்கு பிள்ளைகளுடன் கஷ்டப்பட்ட தாயும். பிரதேச பொலிசாரின் கருணையும். நெகிழ்ச்சி சம்பவம். Reviewed by Madawala News on 12/15/2017 02:43:00 PM Rating: 5