Yahya

ஒரே வாரத்தில் மூன்று முக்கிய சம்பவங்கள் நடந்தேறிய மத்திய கிழக்கு.



1. ️ யேமன் நாட்டை முப்பது வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்த அப்துல்லாஹ் ஸாலிஹ் ஹூத்திகளால் சுட்டுக்கொல்லப்பட்டமை.
2011 ஆம் ஆண்டு அரபு புரட்சி ஏற்படும்வரை சவூதி அரேபியா சார்பானவராக இருந்த அவர் பின்னர் சவுதியின் தலையீட்டால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.

எனினும் இரண்டு வருட காலத்திற்கு முன்னர் ஹூத்திகளுக்கு எதிராக சவூதி கூட்டணி தாக்குதலை மேற்கொண்டது முதல் ஹுத்திகளுக்கு சார்பானவராக சவுதிய கூட்டணிக்கு எதிராக போராடினார். படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் ஹூத்திகளுக்கு எதிராக சவுதிக்கு சார்பாக திரும்பியவர் இறுதியில் ஹூத்திகளால் கொல்லப்பட்டார்.


2.ஜெருசலேத்தை இஸ்ரேலிய தலைநகராக திடீரென அமேரிக்கா அதிபரால் அறிவிக்கப்பட்டமை. பாலஸ்தீனிய இஸ்ரேல் பிரச்சினைய தீர்ப்பதற்கு இருவகை முன்மொழிவுகள் இருக்கின்றன.

 முதலாவது ஒரே நாடு (One State) என்ற முன்மொழிவு. இந்த நிலைப்பாட்டில் பாலஸ்தீன் சார்பானவர்கள் சுதந்திர பாலஸ்தீன் மட்டுமே தீர்வு என்பார்கள். இதைப்போல கடும்போக்கு சியோனிச யூதர்களின் நிலைப்பாடு இஸ்ரேல் மட்டுமே தீர்வு என்பார்கள். இந்த இரண்டு முன்மொளிவுகளுக்கும் சர்வதேச ஆதரவு இல்லை.

இரண்டாவது நிலைப்பாடு – அருகருகில் இரண்டு நாடுகள் என்ற தீர்வு (Two state solutions) . இதற்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு, ஐநா அனுசரணை , சில அரபு நாடுகளின் ஆதரவும் உண்டு. இதற்காகவே யாசர் அரபாத் 1993 இல் உடன்பட்டார்.

ஆனாலும் இந்த தீர்மானத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டிருந்தாலும் , அதை நடைமுறைப்படுத்துவதில் எந்தவித அக்கறையும் கொண்டிருக்கவில்லை. இந்த தீர்வில் முக்கியமாக மூன்று விடயங்களுக்கு முடிவு காணப்படவேண்டி இருக்கிறது.

A) ஜெருசலேம் நகரின் நிலை (Status of Jerusalem)
B) பாலஸ்தீன அகதிகளின் பிரச்சினை
C) 1967 ஆம் ஆண்டு யுத்தத்திற்கு முன்னர் உள்ள எல்லைகளுக்கு இஸ்ரேல் உடன்படவேண்டும்.

இதில் எதற்குமே தீர்வில்லாத நிலையில் திடிரென தூக்கத்தில் இருந்து எழும்பியவனை போல இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்று ட்ரம்ப் அறிவித்தமை ஒட்டுமொத்த உலகின் எதிர்ப்பையும் சம்பாதித்து இருக்கிறது.

இதுவரை இந்த நிலைப்பாட்டை எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் அரபு உலகம் நீண்ட கால உள்நாட்டு மோதல்களாலும், கொள்கை பிளவுகள், நாடுகளுக்கு இடையில் எழும் புதுபுது பூசல்களால் ஏற்பட்டிருக்கும் ஒற்றுமை இன்மையால் கடந்த நூறு வருட கால வரலாற்றில் அரபு உலகம் மிகவும் பிளவுபட்டு பலவீமான நிலையில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.


3. ️ ஈராக்கில் நகரங்கள், கிராமங்கள் மற்றும் பாலைவனங்கள் உட்பட ஐஸ்ஐஸ் வசம் இருந்த அனைத்து பகுதிகளையும் மீள கைப்பற்றிவிட்டதால் ஈராக்கில் ஐஸ்ஐஸுக்கு எதிரான நேரடியான ஆயுத மோதல் முடிவுக்கு வந்திருப்பதாக ஈராக் அறிவித்திருக்கிறது.  சிரியாவிலும் ஐஸ்ஐஸின் முக்கிய நகரங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டிருப்பதால், ஐஸ்ஐஸுக்கு எதிரான விமான தாக்குதல்கள் முடிவுக்கு வந்திருப்பதாக கடந்த வாரம் அறிவித்திருந்த ரஷ்யாவின் அதிபர் புடின் இன்று திடீரென சிரியாவுக்கு விஜயம் செய்திருக்கிறார்.

- தில்ஷான் முகம்மத்-
ஒரே வாரத்தில் மூன்று முக்கிய சம்பவங்கள் நடந்தேறிய மத்திய கிழக்கு. ஒரே வாரத்தில் மூன்று  முக்கிய சம்பவங்கள் நடந்தேறிய மத்திய கிழக்கு. Reviewed by Madawala News on 12/12/2017 07:09:00 AM Rating: 5