Kidny

Kidny

நாட்டில் தீவிரவாதம் ஒழிய, படையினரிடம் காணப்பட்ட மிகச்சிறந்த ஒழுக்கங்களே காரணம்.


தீவிரவாத இயக்கத்தினை தோல்வியடையச் செய்து தாய் நாட்டுக்கு சுதந்திரத்தையும் சமாதானத்தையும்
பெற்றுக் கொடுக்க எமது பாதுகாப்பு படையினரிடம் காணப்பட்ட சிறந்த ஒழுக்கமே காரணம் எனவே நாட்டின் முன்னேற்றத்திற்கு அரசியல்வாதிகள் முதல் சகல துறைகளை சார்ந்தவர்களும் சிறந்த ஒழுக்கத்தை பேண வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கோட்பாட்டு ரீதியான மற்றும் செயன் முறை பயிற்சிகளின் ஊடாக தலைமைத் துவ பண்பையும், நேர்மறை எண்ணங் களையும் விருத்தி செய்தல்" எனும் தொனிப் பொருளில் புதிய மற்றும் ஏற்கனவே பதவியில் உள்ள சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கு இராணுவத்தின் தலைமையிலான தலைமைத்துவ பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

பொலன்னறுவை, மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பயிற்சி திட் டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மற்றும் மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தின் சேனா திபதி ஆகியோரால் வரவேற்க்கப்பட்டார்.

மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் தலைமைத்துவ பயிற்சி நெறியினைத் தொடரும் சமுர்த்தி உத்தி யோகத்தர்களுடன் ஜனாதிப்தி கலந்துரை யாடியிருந்தார். இதன் போது, தீவிரவாத இயக்கத்தினை தோல்வியடையச் செய்து தாய் நாட்டுக்கு சுதந்திரத்தையும் சமாதா னத்தையும் பெற்றுக் கொடுக்க எமது பாது காப்பு படையினரிடம் காணப்பட்ட சிறந்த ஒழுக்கமே காரணம் என தெரிவித்தார்.

மேலும், தவறான பாதையில் பய ணிைக்கும் சமூகத்தை சரியான திசைக்கு கொண்டு செல்வதற்கு தேவையான பழக் கங்களையும் பயிற்சிகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கட்டிக்காட்டிய ஜனாதிபதி, எச்சரிக்கை, குறிக்கோள் அர்ப்பணிப்பு மற்றும் சவால்களை வெற்றி கொள்ளல் தொடர்பான தனது வாழ் வியல் அனுபவங்களையும் இதன் போது பகிர்ந்து கொண்டார்

பொதுமக்களின் இதயத்துடிப்பை அறிந்து அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
பொறுப்புகளை ஜனாதிபதி கட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டில் தீவிரவாதம் ஒழிய, படையினரிடம் காணப்பட்ட மிகச்சிறந்த ஒழுக்கங்களே காரணம். நாட்டில் தீவிரவாதம் ஒழிய, படையினரிடம் காணப்பட்ட மிகச்சிறந்த ஒழுக்கங்களே காரணம். Reviewed by Madawala News on 12/07/2017 12:27:00 PM Rating: 5