Yahya

சிறுவர்கள் இருவர் காணாமல் போனதால் பொதுமக்கள் உதவியை நாடும் மட்டக்களப்பு போலீசார்.



மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் என்னும் இடத்தில் வசித்து வந்த சிறுவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனரென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சுசீலா தெரிவித்தார்.

பெற்றோர் இடையில் இடம்பெற்ற தகராறு காரணமாக சிறுவர்களைத் தகப்பன் அழைத்துச் சென்று இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதனால் சிறுவர்களின் நலன் கருதி, இவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்களைப் பக்கத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறும் அவ்வதிகாரி கேட்டுக்கொண்டார்.

குறித்த சிறுவர்களை நேரத்துக்கு நேரம் பல இடங்களில் மாற்றி மாற்றி வைப்பதால் இதற்குப் பொதுமக்கள் உதவ வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது இடம்பெற்று வரும் சமூக சீர்கேடு காரணமாக சிறுவர்கள் பாதுகாக்க படவேண்டும். அகவே, இந்த சிறுவர்களை மீட்பதற்கு பொதுமக்கள் உதவி வழங்குமாறும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க கோரியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.  
சிறுவர்கள் இருவர் காணாமல் போனதால் பொதுமக்கள் உதவியை நாடும் மட்டக்களப்பு போலீசார். சிறுவர்கள் இருவர் காணாமல் போனதால் பொதுமக்கள் உதவியை நாடும் மட்டக்களப்பு போலீசார். Reviewed by Madawala News on 12/19/2017 08:57:00 AM Rating: 5