Yahya

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி.


பூண்டுலோயா, தலவாக்கலை பிரதான வீதியில் இன்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூண்டுலோயாவில் இருந்து தலவாக்கலை பகுதியை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

பூண்டுலோயா நகரப்பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய கே.வி.ஜீ.அஜந்த குமார இந்துநில் என்ற குடும்பஸ்தரே இதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற வேளையில் அவ்வழியே சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் விபத்துக்குள்ளானவரை கொத்மலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி.  மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி. Reviewed by Madawala News on 12/13/2017 03:06:00 PM Rating: 5