Yahya

ஸ்மார்ட் போன்களினால் கற்றல் நடவடிக்கைகளை பாழாக்கும் சில அரபு மத்ரஸா மாணவர்கள்.



கற்கின்ற காலத்தில் சில அரபு மத்ரஸா மாணவர்களில் சிலர் Facebookல் (முகநூலில்) சதாவும் திலைத்திருப்பது கற்றல் மற்றும் ஆய்வுகளுக்கு பின்னடைவாக அமைந்துவிடும் என்பதை உணர மறந்துவிடுகின்றனர்.

இக்கால கட்டத்தில் அதிகம் கற்றலும், புத்தகங்கள் வாசிப்பதும், நூலகத்தில் ஆய்வுகளில் ஈடுபடுவதுமாக இருப்பதே பயனுடையதாகும் ஏனெனில் ஏழு அல்லது ஆறு வருடங்கள் கழிந்து ஆலிம் என்ற பட்டத்துடன் சமூகத்தில் கால் வைக்கும் போது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மத்ரஸாவில் முறையாக வாசித்து, கற்று, ஆய்வுகளை மேற்கொண்டிருந்தால் மாத்திரமே இன்ன புத்தகத்தில் வருகிறது என உடன் புத்தகத்தில் தேட முடியும், இல்லையேல் இருக்கவே இருக்கிறது google Mufthi என google ல் தஞ்சம் புகும் நிலை தான் ஏற்படும்.

எவ்வித வெலையில்லாது கற்றல் மாத்தரமே குறிக்கோளாகக் கொண்ட இப்பருவத்தில் காலத்தை வீணடித்துவிட்டு எதிர்காலத்தில் கைதேசப்படுவதைத் தவிர்த்து காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதே சிறந்த அறிவாளிக்கு அடையாளமாகும்; ஏனெனில் காலம் மிகவும் அவசரமாக எம்மைவிட்டும் கடந்துவிடும், அத்தோடு மத்ரஸாக்களில் Phone பாவிப்பது தடைசெய்யப்பட்டிருந்தும் ஷைதான் எவ்வாறாவது பயன்படுத்த ஆசையூட்டி அதீத ஆர்வத்தை ஏற்படுத்தி இறுதியில் கல்வியை பாழாக்கி மண்ணள்ளிப் போடும் நிலைக்குத் தள்ளிவிடுவது நிச்சயமாகும்.

இக்குறிப்பிட்ட காலத்தில் Phone ஐ பாவிப்பதில் ஓர் அலாதியான ஈர்ப்பும், சந்தோசமும் வருவதுண்டு ஆனால் வீணடித்த அனைத்து காலத்தின் விளைவையும் ஒரு நாள் கண் முன் காணும் போது தலையில் கை வைத்து யோசித்தவாறு தேம்பித்தேம்பி அழுவதன்றி வேறு வழியில்லை.

முன்னைய ஆலிம்களுக்கும் தற்போதைய ஆலிம் கற்கைகளை மேற்கொள்ளும் ஆலிம்களுக்கும் கற்றல், மற்றும் தேடலில் பாரிய வேறுபாடுகள் உள்ளன, அவற்றில் முக்கிய இடம்பிடிப்பது கற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் Phone பாவிப்பதாகும்.

அல்லாஹ்வே உணர்த்துவதற்குப் போதுமானவன்

நட்புடன்
Azhan Haneefa
ஸ்மார்ட் போன்களினால் கற்றல் நடவடிக்கைகளை பாழாக்கும் சில அரபு மத்ரஸா மாணவர்கள். ஸ்மார்ட் போன்களினால்  கற்றல் நடவடிக்கைகளை பாழாக்கும் சில அரபு மத்ரஸா மாணவர்கள். Reviewed by Madawala News on 12/19/2017 10:24:00 PM Rating: 5