Kidny

Kidny

முஸ்லிம் வியாபாரிகள் அவதானமாகவும், பொறுப்புடனும் செயல்படவும்.


-ஹஸன் இக்பால்-
பெளத்த அடிப்படைவாதிகள் இனவாத நடவடிக்கையொன்றுக்கான
வாய்ப்புக்களை எதிர்பார்த்தி ருக்கும் இந்நிலையில், புத்தாண்டு
பருவகால வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம் வியாபாரிகள் மிகுந்த பொறுப்பு டனும் அவதானமாகவும் செயற் படவேண்டுமென முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இது குறித்து அதன் தலைவர் என்.எம். அமீன் மேலும் கூறுகையில்,

முஸ்லிம்களுக்கு செந்தமான வர்த்தக நிலையில்களில் பொருட்களைக் கொள்வ னவு செய்த இனவாதிகள் சிலர் மீளவும் அவ்வர்த்தக நிலையங்களூக்கு வந்து, கொள்வனவு செய்யப்பட்ட குறித்த பொருட்களில் புத்தரை அவமதிக்கும் குறி யீட்டுச் சின்னங்கள்தா இருப்பதாக கூறி வேண்டுமென்றே இனவாத முறுகல்களை திட்ட மிட்டுத் தோற்றுவிக்க முனைந்த பல சம்பவங்கள் கடந்த காலங்களில்  பதிவாகியிருந்தன.

இவ்வாறான சூழ்ச்சிகளை மீளவும் இனவாதிகள் திட்ட மிட்டு உருவாக்க முனையலாம் எனும் அச்சப்பாடுகள் நிலவு வதால் இது குறித்து முஸ்லிம் வியாபாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் எச்சந்தர்ப் பத்திலும் இனவாதிகளுக்கு முறு கல்ளை தோற்றுவிக்கும் வாய்ப் புக்களை வழங்கி விட்டது,

நிதானமாகவும் சாணக்கியத்து டனும் செயற்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அவ்வாறான எதிர்பாரா நிகழ்வுகள் இடம்பெறும் பட்சத்தில் உரிய தரப்பினரை அணுகி நிலைமைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும்" என தெரி வித்துள்ளார்.

இதுதொடர்பில் பள்ளி வாசல் நிர்வாகங்கள், ஊர் ஜமாத்துக்கள், முஸ்லிம் அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள் பிரதேச முஸ்லிம் வியாபாரிகளை விழிப்புடன் செயற்பட அறிவூட்டுவது அவசியமென அமீன் மேலும் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் வியாபாரிகள் அவதானமாகவும், பொறுப்புடனும் செயல்படவும். முஸ்லிம் வியாபாரிகள்  அவதானமாகவும், பொறுப்புடனும் செயல்படவும். Reviewed by Madawala News on 12/07/2017 12:11:00 PM Rating: 5