Yahya

முஸ்லிம் ஆணும், பெண்ணும் சட்டரீதியான திருமணப் பதிவு செய்து கொள்ளாமல் உள்ளனர். தலதா அத்துகோரளவுக்கு சென்ற கம்ப்ளைன்ட்.


-ஏ.ஆர்.ஏ.பரீல்-

இலங்கையில் முஸ்லிம் ஆணும், பெண்ணும் சட்டரீதியான திருமணப் பதிவினைச் செய்து
கொள்ளாது சமய ரீதியிலான நிக்காஹ் மாத்திரம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்தலாம் என்று முஸ்லிம் தனியார் சட்டத்திலுள்ள விதிகளில் திருத்தம் கொண்டு வருமாறும், நிக்காஹ் வைபவம் நடைபெறும் தினமே விவாகப் பதிவு கட்டாயமாக இடம்பெற வேண்டுமென்றும் முஸ்லிம் பெண்கள் அமைப்புகளின் குழுவொன்று நீதியமைச்சர் தலதா அத்துகோரளயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முஸ்லிம்களுக்கு திருமணப்பதிவு கட்டாயம் என்பதை
உறுதிப்படுத்தும்படியும், பெண்களை காதி நீதிபதிகளாக நியமிக்கும்படியும் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையை 18 ஆக அதிகரிக்கும் படியும், பலதார திருமணத்துக்கு நிபந்தனைகள் விதிக்கும்படியும் முஸ்லிம் பெண்கள் அமைப்பு களின் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு நீதியமைச்சர் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

 அத்தோடு முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஒய்வு பெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழு விற்கு திருத்த சிபார்சு அறிக்கையை தாமதமின்றி கையளிக்கு மாறும் நீதியமைச்சர் தலதா அத்துகோரள உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை நேற்று முன்தினம் முஸ்லிம் பெண்கள் அமைப் புகளின் பிரதிநிதிகள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரையும் சந் தித்து முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் கலந்து ரையாடியதுடன் அறிக்கைகளையும் சமர்ப்பித்தனர்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் பெண்கள் அமைப்பின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரைப் பெற்றுக் கொண்டதுடன், அகில இலங்கை ஜம்இயயத்துல் உலமா சபையைக் கலந்தாலோசித்தே தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். உலமா சபையின் விருப்பத்தையும்மீறி திருத்தங்களைச் செய்யமுடியாது. உலமா சபையுடன் கலந்துரையாடி கோரிக்கைகள் தொடர்பில் தீர்மா னத்தை எட்டுவதாகக் கூறினார்.


இதேவேளை குழுவினரைச் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை நியமிக்கப்பட்டுள்ள குழு கருத்துவேறுபாடுகளைக் களைந்து இறுதித் தீர்மானத்தை எட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவைச் சந்தித்த முஸ்லிம் பெண்கள் அமைப்பின் குழுவினர் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடினர். அடுத்தக்கட்ட சந்திப்பு எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முஸ்லிம் ஆணும், பெண்ணும் சட்டரீதியான திருமணப் பதிவு செய்து கொள்ளாமல் உள்ளனர். தலதா அத்துகோரளவுக்கு சென்ற கம்ப்ளைன்ட். முஸ்லிம் ஆணும், பெண்ணும் சட்டரீதியான திருமணப் பதிவு செய்து கொள்ளாமல் உள்ளனர்.  தலதா அத்துகோரளவுக்கு சென்ற கம்ப்ளைன்ட். Reviewed by Madawala News on 12/12/2017 01:56:00 PM Rating: 5