Yahya

ஜனாதிபதி மைத்திரியே காரணம்... மகிந்த ராஜபக்ஷ காரசாரமான அறிக்கை.


(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இணைந்த கூட்டு அர­சாங்­கத்­துக்கு மக்கள் ஆத­ரவா இல்­லையா என்­பதை உள்­ளூ­­ராட்சி மன்ற தேர்தலில் நிரூ­பிக்­க­வேண்டும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்­துள்ளார்.

நாட்டை சுயா­தீன ராஜ்­ஜி­யங்­க­ளுக்கு சம­மான 9 சமஷ்டி பிரி­வு­க­ளாக பிரிப்­ப­தற்கு தேவை­யான புதிய  அர­சி­ய­ல­மைப்­பொன்றை ஏற்­ப­டு்த்த ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இணைந்து செயற்­ப­டு­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இது தொடர்­பாக அவர் விடுத்­துள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

மக்­கள்முன் செல்­வ­தற்கு இருந்த அச்சம் கார­ண­மா­கவே அர­சாங்கம் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை மூன்று வரு­டங்­க­ளாக பிற்­ப­டுத்தி வந்­தது, தற்­போது தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் பெற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளன.

 உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் நாட்டின் அர­சியல் அதி­கா­ரத்தில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தொன்­றல்ல, என்­றாலும் ஆளும் அர­சாங்­கத்­துக்கு எதிர்ப்பை வெளிக்­காட்­டு­வ­தற்கு மக்­க­ளுக்கு கிடைக்கும் முத­லா­வது சந்­தர்ப்­ப­மாகும்,

இதற்கு முன்னர் 2015 ஆம் பொது தேர்­தலில் ஜனா­தி­பதி ஐக்­கிய தேசிய கட்­சியை வெற்­றி­ய­டை­யச்­செய்ய ஐக்­கிய மக்கள் சுகந்­திர முன்­ன­ணியின் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முடக்­கு­வ­தற்கு, தேர்­த­லுக்கு சில தினங்கள் இருக்கும் நிலையில் பகி­ரங்க அறி­வித்தல் விடுத்தார்.

அத்­துடன் ஸ்ரீலங்கா சதந்­திர கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆகி­ய­வற்றின் செய­லா­ளர்­களை ஒரே தட­வை­யாக நீக்­கி­யமை உட்­பட பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்தார். இவ்­வாறு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தற்­போ­தைய தலைவர் ஐக்­கிய தேசிய கட்­சியை கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் வெற்­றிப்­பெற செய்தார். அத­னாலே இம்­முறை கூட்டு எதிர்க்­கட்சி வேறு சின்­னத்தில், வேறு கூட்­டணி அமைத்து தேர்­த­லுக்கு முகம் கொடுக்­க­வுள்­ளது.

அத்­துடன் கூட்டு எதிர்க்­கட்­சியின் பிர­தான நோக்­க­மாக இருப்­பது, அர­சாங்­கத்­துக்கு விரோ­த­மான மக்­க­ளுக்கு மாற்று அர­சியல் வழி­யொன்றை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுப்­ப­தாகும். அர­சாங்­கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ராக பகி­ரங்­க­மாக எதிர்ப்பு தெரி­விக்­கின்­ற­போதும் இவர்கள் இரு தரப்­பி­னரும் ஒரே அமைச்­ச­ர­வையில் இருந்­து­கொண்டு கூட்டு அர­சாங்கம் அமைப்­ப­தற்கு தேவை­யான அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் ஒற்­று­மை­யாக செயற்­ப­டு­கின்­றனர்.

அத்­துடன் நாட்டை சுயா­தீன ராஜ்­ஜி­யங்­க­ளுக்கு சம­மான 9 சமஷ்டி பிரி­வு­க­ளாக பிரிப்­ப­தற்கு தேவை­யான புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை ஏற்­ப­டு்த்த ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இணைந்து செயற்­ப­டு­கின்­றது.

உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எதிர்ப்பு தெரி­வித்து வரு­வது நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தற்கு எதி­ராக மாத்­தி­ர­மாகும். ஐக்­கிய தேசிய கட்சி இந்­தி­யா­வுடன் செய்­து­கொள்­ள­வுள்ள எட்கா ஒப்­பந்­தத்­துக்கு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. அத்­துடன் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக யுத்­தத்­துக்கு தலை­மைத்­துவம் வழங்­கிய இர­ணுவ வீரர்­களை பகி­ரங்­க­மாக சிறை­யி­ல­டைக்­கும்­போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­வ­ருக்கு அதற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தைத்­த­விர வேறு எதனை செய்­ய­மு­டிந்­தது.

அதே­போன்று மக்கள் விடு­தலை முன்­னணி எதிர்க்­கட்சி போன்று நடித்­தாலும் அதுவும் அர­சாங்­கத்தின் பங்­கு­தா­ர­ராகும். அர­சாங்­கத்தின் அனைத்து ஜன­நா­யக விரொத செயல்­க­ளுக்கும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஆத­ரவு ஆரம்­பத்தில் இருந்து பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அவர்கள் கூட்டு எதிர்க்­கட்­சியை வன்­மை­யாக விமர்­சிப்­ப­துடன் அர­சாங்­கத்தை மிகவும் மிரு­து­வா­கவே விமர்­சித்து வரு­கின்­றனர். அத்­துடன் கூட்டு அர­சாங்கம் கொண்­டு­வ­ர­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கும் மக்கள் விடு­தலை முன்­னணி ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றது.

அத்­துடன் 2005 ஆம் ஆண்டில் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வரு­வதை தடுப்­ப­தற்­காக சோம­வங்ச அம­ர­சிங்க தலை­மையில் எனக்கு ஆத­ர­வ­ளித்த மக்கள் விடு­தலை முன்­னணி, வேறு தலை­வரின் கீழ் இன்று ஐக்­கிய தேசிய கட்­சியின் கைபொம்­மை­யாக மாறி­யுள்­ளது. அதனால் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் நாட்டில் இருக்கும் உண்­மை­யான அரச விரொத சக்­தி­யாக இருப்­பது கூட்டு எதிர்க்­கட்­சி­யாகும் என்­பதை அனைத்து வாக்­கா­ளர்­களும் உணர்ந்­து­கொள்­ள­வேண்டும்.

எனவே நாட்டின் அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொண்டு இந்த கூட்டு அர­சாங்கம் மேற்­கொள்ளும் அரா­ஜகம் தொடர்­பாக புதி­தாக தெரி­விக்­க­வேண்­டி­ய­தில்லை. நாட்டின் ஆட்சியை சரியானமுறையில் மேற்கொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் முடியாமல் போயுள்ளது எ ன்பது கண் முன்னாலே ஒப்புவிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமத்தின் அதிகாரத்தையும் எதற்காக அவர்கள் கேட்கின்றனர் என்பதை வாக்காளர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். அத்துடன் இந்த தேர்தலில் நீங்கள் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டு அரசாங்கத்துக்கு ஆதரவா அல்லது எதிர்ப்பா என்ற நிலைப்பாட்டில் மாத்திரம் தங்கள் வாக்குகளை அளிக்கவேண்டும்
ஜனாதிபதி மைத்திரியே காரணம்... மகிந்த ராஜபக்ஷ காரசாரமான அறிக்கை. ஜனாதிபதி  மைத்திரியே காரணம்... மகிந்த ராஜபக்ஷ காரசாரமான அறிக்கை. Reviewed by Madawala News on 12/15/2017 11:37:00 AM Rating: 5