Yahya

ஜனா­தி­பதியின் வாள்­வீச்சில் சிக்­கப்­போ­வது ஐ.தே.க.வினர் அல்ல. பொறுத்திருந்து பாருங்கள்.


கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் தலை­மைத்­துவப் போட்டி ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்ள அமைச்சர் பீ ஹரிசன், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வாள்­வீச்சில் சிக்­கப்­போ­வது ஐ.தே.க.வினர் அல்ல என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

அநு­ரா­த­பு­ரத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்­டி­ருந்­ததன் பின்னர் அமைச்சர் ஹரி­ஸ­னி­டத்தில் ஊட­க­வி­ய­லாளர் கேள்­வியெழுப்பியபோதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர்­மேலும் தெரி­விக்­கையில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லேயே உண்­மை­யான சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் உள்­ளனர். கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் என்று கூறிக்­கொண்டு ஒரு­சிறு குழு­வி­னரே இருக்­கின்­றார்கள். அவர்கள் தான் நாட்டில் அனைத்துக் குழப்­பங்­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றார்கள்.

தற்­போது அந்­தக்­கு­ழு­வி­ன­ருக்­குள்ளே தலை­மைத்­துவப் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. அந்த அணியில் உள்­ள­வர்­களில் ஒரு­கு­ழு­வினர் நாமல் ராஜ­பக்ஷ தலை­மை­யேற்க வேண்டும் என்­கின்­றார்கள். மற்­றொரு குழு­வினர் பசில் ராஜ­பக்ஷ தலை­மை­யேற்ற வேண்­டு­மென்று கூறு­கின்­றார்கள். மற்­றொரு அணி­யினர் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தலை­மை­யேற்க வேண்டும் என்று வலி­யு­றுத்­து­கின்­றார்கள். ஒரு­சிலர் மகிந்த ராஜ­பக்ஷ தலை­மை ­ஏற்­க­வேண்டும் என்றும் கூறு­கின்­ற­ரார்கள். இதனை விடவும் அங்­குள்ள சில­ருக்கு தலை­மைத்­துவக் கன­வு­களும் காணப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றான ஒரு தலை­மைத்­து­வத்­திற்­காக முரண்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் தரப்­பி­னரால் எப்­படி நாட்­டினை நிரு­வாகம் செய்­ய­மு­டியும். இவர்­க­ளுக்குள் தற்­போது தலை­மைத்­தவ முரண்­பா­டுகள் வலுத்­துள்­ளன. சொற்ப காலத்தில் இந்த அணிக்குள் பாரிய மோதல்கள் ஏற்­பட்டு அந்த அணியே இல்­லாது செல்லும் நிலை­மை­யொன்றே உள்­ளது.

மேலும் உள்­ளு­ராட்சி மன்­றங்­களின் தேர்தல் முடி­வுகள் நிச்­சயம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் யுகத்­தினை பறை­சாற்­று­வ­தா­கவே இருக்கும். அதில் எவ்­வி­த­மான அச்­சப்­பாடும் கொள்­ளத்­தே­வை­யில்லை. ஐக்­கிய தேசியக் கட்­சியின் வெற்­றி­யா­னது ஏறக்­கு­றைய உறு­தி­யா­க­விட்ட நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

ஜனாதிபதி தற்போது தூய ஆட்சிக்காக வாள் வீச்சினை நடத்தவுள்ளதாக கூறுகின்றார்கள். அந்த வாள்வீச்சினால் பாதிக்கப்படப்போவது நாம் அல்ல. சிக்கப்போவதும் நாம்(ஐ.தே.க.வினர்) அல்ல. யார் என்பதை பொறுத்திருந்து பார்க்க முடியும் என்றார்.
ஜனா­தி­பதியின் வாள்­வீச்சில் சிக்­கப்­போ­வது ஐ.தே.க.வினர் அல்ல. பொறுத்திருந்து பாருங்கள். ஜனா­தி­பதியின் வாள்­வீச்சில் சிக்­கப்­போ­வது ஐ.தே.க.வினர் அல்ல. பொறுத்திருந்து பாருங்கள். Reviewed by Madawala News on 12/30/2017 11:19:00 AM Rating: 5