Yahya

NFGG இன் 2 ஆவது கட்ட வேட்பாளர்கள் மாநாடு.


நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் 2 ஆவது கட்ட வேட்பாளர்கள் மாநாடு நேற்று கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.



NFGG யின் பொருளாளரும் கொழும்பு மாநகர சபை வேட்பாளருமான ஹனான் ஹுசைன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் NFGG இல் இனைந்து போட்டியிடும் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, NFGG இன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத், பிரதி தவிசாளர் சிராஜ் மஸ்ஹூர், திராவிட மக்கள் கட்சியின் தலைவர் முனியாண்டி ஆகியோர் உரையாற்றினர்.


இந்நிகழ்வின் போது NFGG யின் கொழும்பு மாநகர சபை வேட்பாளர்கள், அத்தனகல பிரதேச சபை வேட்பாளர்கள், புத்தளம் நகர சபை வேட்பாளர்கள் மற்றும் முசலி பிரதேச சபை வேட்பாளர்கள் கலந்துகொண்டதுடன் அவர்களின் பிரதிநிதிகளும் உரையாற்றினர்.

இதன் போது NFGG யின் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்பட்டது.


NFGG யின் 1ஆம் கட்ட வேட்பாளர்கள் மாநாடு கடந்த 24 ஆம் திகதி காத்தான்குடியில் நடைபெற்றதுடன் அதில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
--
MUNEERARQAM

NFGG இன் 2 ஆவது கட்ட வேட்பாளர்கள் மாநாடு. NFGG இன் 2 ஆவது கட்ட வேட்பாளர்கள் மாநாடு. Reviewed by Madawala News on 12/31/2017 10:17:00 PM Rating: 5