Kidny

Kidny

NFGG இரண்டாம் தடவையாகவும் கிந்தோட்டைக்கு விஜயம். பாதிப்புக்களை ஆவணப்படுத்தி வெளியிட உறுதி.


NFGG பிரதி தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர், கடந்த செவ்வாயன்று (28.11.2017) காலி கிந்தோட்டைக்கு விஜயம் மேற்கொண்டு, சமூக செயற்பாட்டாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

கிந்தோட்டை இனவாத வன்முறையினால் ஏற்பட்ட அழிவுகள், பாதிப்புகள் குறித்து நம்பகமானதும் சுயாதீனமானதுமான நிறுவனமொன்றினால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அது வெளியிடப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு NFGG தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

அழுத்கமை கலவரத்தின்போது NFGG யின் முன் முயற்சியினால், Law and Society Trust (LST) வெளியிட்ட ஆவணத்தை இதற்கு சான்றாக எடுத்துக் காட்டினார்.

மேலும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நல்லிணக்க செயற்பாடுகள் குறித்த ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

அத்தோடு, மூத்த ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான விக்டர் ஐவனை காலியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த  பிரதி தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர், கிந்தோட்டை சிங்கள- முஸ்லிம் மக்களுக்கு நல்லிணக்கம் தொடர்பில் நிகழ்ச்சிகளை  நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடினார். அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக விக்டர் ஐவனும் உடன்பட்டார்.

அழுத்மை / தர்கா நகர் இன வன்முறையின் பின்னர், NFGG யின் முன் முயற்சியினால் LST யால் வெளியிடப்பட்ட - வன்முறையின் தூண்டற் காரணிகள், அழிவுகள், பாதிப்புகள் குறித்த ஆய்வு ஆவணம் உள்ளூர் மற்றும், சர்வதேச மட்டத்தில் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் இயங்கும் தேசிய ஐக்கியத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் (ONUR), சமீபத்தில் அதனை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தமையும் இங்கு  குறிப்பிடத்தக்கது.
NFGG இரண்டாம் தடவையாகவும் கிந்தோட்டைக்கு விஜயம். பாதிப்புக்களை ஆவணப்படுத்தி வெளியிட உறுதி. NFGG இரண்டாம் தடவையாகவும் கிந்தோட்டைக்கு விஜயம்.  பாதிப்புக்களை ஆவணப்படுத்தி வெளியிட உறுதி. Reviewed by Madawala News on 12/01/2017 03:02:00 PM Rating: 5