Kidny

Kidny

தாருன் நுஸ்ரா 18 அநாதை பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்.. குற்றவாளிகள் தோலுரிக்கப்படவேண்டும்.


தாருன் நுஸ்ரா அநாதை இல்லத்தில் 18 அநாதை பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு
உள்ளாக்கபட்ட விடயம் நடந்து பல மாதங்களாகியும் நாம் தொடர்ந்தும் கணத்த மௌனத்தில் இருக்கிறோம்.


இதே குழந்தைகளுக்கு , தாருன் நுஸ்ரா அல்லாத இன்னுமொரு பொதுவான அநாதை இல்லத்தில் இதே வகையான சம்பவம் நடந்திருந்தால், நாம் இரண்டு பக்கங்களையும் ஆராயணும் என்றோ நீதி மன்றம் தீர்ப்பை எழுதட்டும் அதுவரை அவதானிகளாக இருப்போம் என்றோ, மெடிகல் ரிப்போட் என்ன சொல்லுது என்றோ சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டு இருந்திருப்போமா என்று எமது மனசாட்சியை கேட்டால், நிச்சியமாக இல்லை என்பதே பதில் !!

பந்தி பந்தியாக பதிவுகள் எழுதியிருப்போம், ஆர்ப்பாட்டம் அது இதுன்னு அசத்தியிருப்போம்.

இந்த விடயம் வெளியில் ஒரு பேசு பொருளாகிவிடக்கூடாது என்று ஊடகங்களில் செய்திகள் வரவிடாமல் தடுத்தவர்களுக்கும், இது தொடர்பாக இன்றுவரை மௌனம் காக்கும் பல சமூக அமைப்புக்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?


இந்த விடயம் வெளியில் கசிந்தால் அரபு நாடுகளில் இருந்து கோடி கோடியாக கொட்டும் ரியால்களை அரபு தனவந்தர்கள் நிறுத்திவிடுவார்கள். அப்படி எதாச்சும் நடந்து விட்டால் சமூகத்தை காட்டி தாம் அனுபவிக்கும் மேட்டுக்குடி சுகபோகங்க வாழ்க்கைக்கு ஆபத்து வந்துவிடும் என்று அவர்கள் தயங்குகிறார்கள். அது அவர்களின் பிரச்சினை.

ஆனாலும் சொந்த காலில் ஹலாலாக சம்பாதித்து உண்ணும் நாமும் ஏன் இதை பேசுவதற்கு தயங்கவேண்டும்? ஒருவேளை நாம் எதை பேசவேண்டும் என்றும் அவர்களே தீர்மானிக்கிறார்களா? இந்த விடயத்தில் நாம் உண்மையில் நீதியின் பக்கம் நிற்கிறோமா?


அந்த அப்பாவி குழந்தைகளில் ஒன்று எனது குழந்தையாக அல்லது எனது சகோதரியாக இருந்தாலும் இப்படித்தான் மௌனம் காப்பேனா என்று சில நாட்களாக எனக்குள் ஆயிரம் கேள்விகள். எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் எமது மௌனம் is a shame !!

அந்த அப்பாவி ஜீவன்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அவர்களுக்கு நீதி கிடைப்பதை தடுக்க நினைக்கும் எந்தவொரு சக்தியாக இருந்தாலும் பாரபட்சம் இன்றி சமூக நீதி மன்றத்தின் மத்தியில் தோலுரிக்கப்படவேண்டும்.

-Dilshan Mohamed
தாருன் நுஸ்ரா 18 அநாதை பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்.. குற்றவாளிகள் தோலுரிக்கப்படவேண்டும். தாருன் நுஸ்ரா  18 அநாதை பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்.. குற்றவாளிகள் தோலுரிக்கப்படவேண்டும். Reviewed by Madawala News on 12/05/2017 04:28:00 PM Rating: 5