Yahya

டொனால்ட் ட்ரம்ப்பின் ஜெருசல அறிவிப்புக்கு இலங்கையும் கண்டனம்.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரித்ததை இலங்கை - பாலஸ்தீன நாடாளுமன்ற நட்புறவுச் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

சங்கத்தின் தலைவரான அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் கையெழுத்தில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில் இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜெருசலேத்தை தலைநகராக அங்கீகரித்து தமது நாட்டின் தூதரகத்தை டெல் அவிவ்வில் இருந்து ஜெருசலேத்திற்கு மாற்றும் தீர்மானத்தையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஜெருசலேம், பாலஸ்தீனத்தின் எல்லைக்கு உட்பட்டது என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கொண்டு வந்த யோசனையை இது மீறும் செயல்.

அமைதி மற்றும் ஜனநாயகத்தை கடுமையான நேசிக்கும் மக்கள் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை கண்டிப்பார்கள் என்பது எமது சங்கம் அறியும்.

இந்த அறிவிப்பின் மூலம் முழு மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் மோதலான நிலைமை உருவாகியுள்ளது.

பாலஸ்தீனம் ஒரு சுதந்திரமான நாடு எனவும் அதன் தலைநகரம் ஜெருசலேம் என்று அன்றிலிருந்து இன்றுவரை சங்கம் நிலைப்பாட்டில் இருந்து வருகிறது.

உலகில் உள்ள 140 நாடுகளின் நிலைப்பாடும் இதுவாகும். அமைதி மற்றும் ஜனநாயகத்தை நேசிக்கும் உலக மக்களின் நிலைப்பாடும் இதுவாகும் என அங்கீகரித்ததை இலங்கை - பாலஸ்தீன நாடாளுமன்ற நட்புறவுச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப்பின் ஜெருசல அறிவிப்புக்கு இலங்கையும் கண்டனம். டொனால்ட் ட்ரம்ப்பின் ஜெருசல அறிவிப்புக்கு இலங்கையும் கண்டனம். Reviewed by Madawala News on 12/10/2017 03:56:00 PM Rating: 5