Kidny

Kidny

மஹிந்த ராஜபஷவினால் மட்டுமே தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும் | தம்பிதுரை ரஜீவ் .



 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவினால் மட்டுமே தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும் என யாழ். – சாவகச்சேரி நகரசபை வேட்பாளர் தம்பிதுரை ரஜீவ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கட்சியின்சார்பில் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் அவர் இன்று தேர்தல் கட்டுப்பணத்தினை யாழ். உதவி தேர்தல் அலுவலகத்தில் செலுத்தினார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடளாவிய ரீதியில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என தாம் வலியுருத்திவருவதாக குறிப்பிட்ட அவர், யாழ். மாட்டத்தின் தேர்தலுக்கு தாம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அபிவிருத்தியைப் பொறுத்தவரையிலும் எமது கட்சியினரால் மாத்திரமே சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் தம்பிதுரை ரஜீவ் மேலும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபஷவினால் மட்டுமே தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும் | தம்பிதுரை ரஜீவ் . மஹிந்த ராஜபஷவினால் மட்டுமே தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும் | தம்பிதுரை ரஜீவ் . Reviewed by Madawala News on 12/01/2017 12:09:00 AM Rating: 5