Yahya

ஜனவரி 25, 26 இல் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும். தேர்தல் ஆணையாளர்.


உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அது தொடர்பான ஆவணம் தயாரிக்கப்பட்டுவருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்த நிலையில்

தபால்  மூல வாக்களிப்புக்களை ஜனவரி மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளுக்கிடையில் நடத்துவதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

இதனிடையே, உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இதுவரையில் 24 முறைப்பாடுகள் காவற்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல் தேர்தல் விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளுராட்சி மற்ற தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 25, 26 இல் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும். தேர்தல் ஆணையாளர். ஜனவரி 25, 26 இல் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும். தேர்தல் ஆணையாளர். Reviewed by Madawala News on 12/25/2017 11:37:00 AM Rating: 5