Yahya

தேர்தல் சுவரொட்களை ஒட்டிக்கொண்டிருந்த நால்வர் கைது.



-ஜே.எம்.ஹபீஸ்-

கண்டி – மகியங்கனைப் பாதையில் உடதும்பறைப் பிரதேசத்தில் தேர்தல் சுவரொட்களை
ஒட்டிக்கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதில் ஒருவர் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் எனவும் உடதும்பறைப் பொலீசார் தெரிவித்தனர்.

(27.12.2017 இரவு)
அவர்களடமிருந்து 83 போஸ்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவர்கள் ஒரு கெப்ரக வாகனத்தில் அங்கு வந்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். 

தேர்தல் சட்ட விதிகளின் படி இவ்வாறு சுவரொட்டிகளை ஒட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்களை தெல்தெனிய நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாகவும் பொலீசார் தெரிவித்தனர்.

தேர்தல் சுவரொட்களை ஒட்டிக்கொண்டிருந்த நால்வர் கைது. தேர்தல் சுவரொட்களை ஒட்டிக்கொண்டிருந்த நால்வர் கைது. Reviewed by Euro Fashions on 12/28/2017 04:52:00 PM Rating: 5