Yahya

பொத்துவிலில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு.


பொத்துவில் மண்மலையை அண்டிய ஜலால்தீன் சதுக்க கடற்கரைப் பிரதேசத்தில் அழுகிய நிலையில் ஆனொருவரின் சடலமொன்றினை பொலிசார் மீட்டுள்ளனர்.


பொத்துவில் P/03 கிராமசேவகர் பிரிவு மண்மலையை அண்டியிருக்கும் கடற்கரைப் பகுதி வளர்ப்பு மரங்கள் நிறைந்த பற்றைக்காட்டிற்குள் அழுகிய நிலையில் ஆனொருவரின் உடலமொன்றினை இன்று பகல் பொலிசார் மீட்டுள்ளனர். 

இரண்டு மூன்று நாட்களுக்குமுன் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படும் உடலத்திலிருந்து துர்வாடை வீசியதையடுத்து பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிசார் குறித்த உடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

- kalifa nazit -
பொத்துவிலில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு. பொத்துவிலில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு. Reviewed by Euro Fashions on 12/19/2017 07:55:00 PM Rating: 5