Yahya

கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்திற்கு நாடாளுமன்றம் நுழைந்தவருக்கு ஜனாதிபதியால் அமைச்சு வழங்கப்பட்டது.


சட்டம்,ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை (28) ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இவருக்கான நியயமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிவைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் வெற்றிடமானது பியசேன கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவருக்கு இன்று இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்திற்கு நாடாளுமன்றம் நுழைந்தவருக்கு ஜனாதிபதியால் அமைச்சு வழங்கப்பட்டது. கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்திற்கு நாடாளுமன்றம் நுழைந்தவருக்கு ஜனாதிபதியால்  அமைச்சு வழங்கப்பட்டது. Reviewed by Madawala News on 12/28/2017 11:28:00 AM Rating: 5