Yahya

Breaking... புகையிரத ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் பணியில் இருந்து நீங்கியதாக கருதப்படுவர்.


சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, 12 ரயில் தொழிற்சங்கள், கடந்த 3 தினங்களாக முன்னெடுத்துவரும் ரயில் சேவைப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம், தொடர்ந்து இடம்பெறும் என்று, தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில்..

புகையிரத ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் பணியில் இருந்து நீங்கியதாக கருதப்படுவர் என போக்குவரத்து அமைச்சு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளருடன் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள்  தோல்வியடைந்து, வர்த்தமானியில்  ரயில் சேவைப் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கபட்டும்  பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம், தொடர்ந்த நிலையிலேயே அமைச்சு இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ளது.
Breaking... புகையிரத ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் பணியில் இருந்து நீங்கியதாக கருதப்படுவர். Breaking... புகையிரத ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் பணியில் இருந்து நீங்கியதாக கருதப்படுவர். Reviewed by Madawala News on 12/09/2017 01:28:00 PM Rating: 5