Yahya

மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாது­காப்பை குறைக்க மாட்டோம். அவரை பாதுகாப்பது எமக்குத் தான் இலாபம்.


முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாது­காப்பில் எவ்­வித­மான குறை­பா­டு­களும் ஏற்­ப­டு­வ­தற்கு எமது அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்­கா­தென உறு­தி­ப­டத்­தெ­ரி­வித்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அவ­ரு­டைய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக புல­னாய்வு அறிக்கை கிடைக்­கு­மாயின் உட­ன­டி­யாக பாது­காப்­பினை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்  என்றும்   அவரை பாது­காப்­பதில் எமக்கு இலாபம் உள்­ளது என்றும் குறிப்­பிட்டார்

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நிலை­யி­யற்­கட்­டளை 23இன் கீழ் இரண்டின் கீழ் கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுத் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன,

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருக்கும் சூழ்­நி­லையில் பெருந்­தொ­கை­யான மக்கள் கலந்­து­கொள்ளும் பிர­சாரக் கூட்­டங்­களில் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ பங்­கெ­டுப்பார். அவ­ரு­டைய பாது­காப்­புக்கு காணப்­படும் அச்­சு­றுத்­தலை கவ­னத்தில் கொண்டு விசேட பாது­காப்பு பிரி­வொன்றை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அவ­சர நிலை­மை­யொன்று ஏற்­ப­டும்­போது அவ­ருக்கு பாது­காப்பு வழங்க இப்­பி­ரிவு அவ­சி­ய­மா­க­வுள்­ளது. இந்­திய பிர­த­ம­ரா­க­வி­ருந்த ராஜீவ் காந்­தியின் பாது­காப்பு குறைக்­கப்­பட்­ட­மை­யா­லேயே அவரை இலக்­கு­வைத்து குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. ஆகவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாது­காப்பு உட­ன­டி­யாக அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்­குப்­ப­தி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பி­டு­கையில்,

முன்னாள் நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­களின் பாது­காப்­புக்கு காணப்­படும் அச்­சு­றுத்தல் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட மதிப்­பீ­டுகள் மற்றும் புல­னாய்­வு­து­றையின் அறிக்­கை­க­ளுக்கு அமை­யவே அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பாது­காப்பு குறித்த தீர்­மானம் எடுக்­கப்­ப­டு­வதே முறை­மை­யா­கின்­றது.

அந்த முறை­மைக்கு அமை­வா­கவே முன்னாள் ஜனா­தி­ப­தி­யான மகிந்த ராஜ­பக்ஷ மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகி­யோ­ருக்­கான பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்ஷவின் பாது­காப்­புக்­காக உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஒரு­வரும் பிர­தம பொலிஸ் பரி­சோ­தகர் ஒரு­வரும் பொலிஸ் பரி­சோ­த­கர்கள் 9பேரும் பொலிஸ் உதவிப் பரி­சோ­த­கர்கள் 14 பேரும், பெண் பொலிஸ் உதவி பரி­சோ­தகர் ஒரு­வரும் பொலிஸ் சார்­ஜன்கள் 31 பேரும்;, இரண்டு பெண் பொலிஸ் சார்­ஜன்­களும், 73 பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளு­மாக 154 பேரர் வழங்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் அவர்­க­ளுக்­கு­ரிய வாக­னங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் பாது­காப்­புக்கு 61 பேர் மாத்­தி­ரமே வழங்­கப்­பட்­டுள்­ளனர். மகிந்த ராஜ­ப­க்ஷவின் பாது­காப்­புக்கு காணப்­படும் அச்­சு­றுத்­தலை கவ­னத்தில் கொண்டே கூடு­த­லான பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

அவ­ரு­டைய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் இருக்­கு­மாயின் அதனைக் கவ­னத்தில் கொண்டு பாது­காப்பை அதி­க­ரிக்­கு­மாறும் சட்டம் ஒழுங்கு அமைச்­சிடம் இது­வரை எந்த கோரிக்­கையும் விடுக்­கப்­ப­ட­வில்லை. அவ்வாறு கோரிக்கைவிடுக்கப்பட்டால் அதனை ஆராய்ந்து பார்க்க முடியும்.

அவ்வப்போது கிடைக்கும் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைக்கு அமைய அச்சுறுத்தல் இருப்பது உறுதியானால் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பாதுகாப்பதில் எமக்கு இலாபம் உள்ளது. அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றார்.
மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாது­காப்பை குறைக்க மாட்டோம். அவரை பாதுகாப்பது எமக்குத் தான் இலாபம். மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாது­காப்பை குறைக்க மாட்டோம். அவரை பாதுகாப்பது எமக்குத் தான் இலாபம். Reviewed by Madawala News on 12/09/2017 11:15:00 AM Rating: 5