Yahya

ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் பஷில் ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடையில் உள்ள டீலால் எமக்கு இலாபமே... சுதந்திரக்கட்சி.


ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்தர் பஷில் ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடையில் காணப்­படும் டீல் கார­ண­மா­கவே சுதந்­திரக் கட்­சிக்கும் கூட்டு எதி­ர­ணிக்கும் இணைந்­து­கொள்ள முடி­யாமல் போனது என்று சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும்  இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.  

கூட்டு எதி­ர­ணியும் சுதந்­திரக் கட்­சியும் இணை­யா­மையின் கார­ண­மாக ஐக்­கிய தேசிய கட்­சிக்கு உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் நன்மை ஏற்­பட்­டுள்­ளது என்­ப­தனை நேர்­மை­யான முறையில் ஏற்­றுக்­கொள்­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.  

இது தொடர்பில் டிலான் பெரெரா மேலும் குறிப்­பி­டு­கையில் சுதந்­திரக் கட்சி சிறப்­பான முறையில் தேர்­த­லுக்கு தயா­ராகி வரு­கின்­றது. பாரிய நம்­பிக்­கை­யுடன் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றோம். தற்­போது நாங்கள் இரண்­டாக பிரிந்து போட்­டி­யி­டு­கின்றோம்.

எப்­ப­டியும் பிர­தான கட்சி ஒன்­றி­லி­ருந்து ஒரு தரப்­பினர் பிரிந்து சென்ற பின்னர் மீண்டும் அவர்கள் கட்­சி­யுடன் வந்து இணைந்­து­கொள்­வதே இறு­தியில் நடக்கும். இலங்­கையின் பிர­தான கட்­சி­க­ளுக்கு இவ்­வாறே நடந்­துள்­ளது.

 அந்­த­வ­கையில் சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து கூட்டு எதி­ர­ணிக்கு எம்.பி. க்கள் செல்­லப்­போ­வ­தாக கூறப்­பட்­டது. ஆனால் தற்­போது மாறியே இடம்­பெ­று­கின்­றது. அதா­வது கூட்டு எதி­ர­ணி­யி­லி­ருந்து சுதந்­திரக் கட்­சிக்கு எம்.பி. க்கள் வந்­து­கொண்­டி­ருப்­பதை காண­மு­டி­கின்­றது.

அடுத்த வார­ம­ளவில் மேலும் நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கூட்டு எதி­ர­ணி­யி­லி­ருந்து விலகி சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்­து­கொள்­வார்கள். அந்­த­வ­கையில் எமது கட்சி பல­ம­டைந்து வரு­கின்­றது.

இதே­வேளை ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்தர் பஷில் ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடையில் காணப்­படும் டீல் கார­ண­மா­கவே சுதந்­திரக் கட்­சிக்கும் கூட்டு எதி­ர­ணிக்கும் இணைந்­து­கொள்ள முடி­யாமல் போனது. ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் பஷில் ரா௪­ப­க்ஷ­வுக்கும் டீல் இருக்­கின்­றமை எங்­க­ளுக்கு எங்­க­ளுக்கு தெரியும். அவர்கள் அதனை மறைத்­தாலும் எங்­க­ளுக்கு தெரியும். எதனால் இவ்­வாறு டீல் போட்­டுள்­ளனர் என்றும் எங்­க­ளுக்கும் தெரியும்.

எங்­க­ளுக்கும் ஐக்­கிய தேசிய கட்சிக்கும் இடையில் பல பிரச்சினைகள் கருத்து முரண்பாடுகள் உள்ளன. ஆனால் அரசியலமைப்பு என்ற விடயத்துக்காக நாங்கள் அவற்றை பொறுத்துக்கொண்டு இருக்கின்றோம். இந்த நேரத்தில் தேசிய முக்கியத்துவம் குறித்து சிந்திக்கின்றோம் என்றார்.
ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் பஷில் ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடையில் உள்ள டீலால் எமக்கு இலாபமே... சுதந்திரக்கட்சி. ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் பஷில் ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடையில் உள்ள டீலால் எமக்கு இலாபமே... சுதந்திரக்கட்சி. Reviewed by Madawala News on 12/14/2017 10:49:00 AM Rating: 5