Kidny

Kidny

மலாய் பெண்களும் இலங்கை அரசியலில் செயல்பட வேண்டும். இது காலத்தின் தேவை.


மலாய் மக்கள் அரசியலிலும் ஈடுபட்டனர். இப்பொழுது இலங்கையைப் பொறுத்தவரை அரசியலில்
பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளூராட்சி சபைகளிலிருந்து பல்வேறு மட்டங்க ளிலும் வலியுறுத்தப்ப டுகின்ற சூழ்நிலையில் மலாய் பெண்களும் அரசியல் செயற்பாட்டாளர்களாக செயற்பட முன்வர வேண்டியது காலத்தின் தேவையாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 "இலங்கை மலாய் மக்களின் இனத்துவ அடையாளமும், அதன் சவால்களும்" என்ற கருப்பொருளில் தென் கிழக்கு பல்கலைக்க ழகத்தின் சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் எழுதிய ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த செவ் வாய்க்கிழமை மாலை கொழும்பு-07, ஜே.ஆர்.ஜயவர் தன நிலையத்தில் இடம்பெற்றபோதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார் .

அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில், இஸ்லாத்தின் எழுச்சியோடும், வளர்ச்சியோடும் இணைந்ததாக இஸ்லாமிய நாகரிகம்  தென் மற்றும் தென் கிழக்கு ஆசியாவுக்கு பரவ ஆரம்பித்ததிலிருந்து அதன் தாக்கம் இந்திய துணைக்கண் டத்தையும் கடந்து அதற்கு அப்பால் மலேசியா, இந்தோ னேசியா ஆகிய நாடுகளுக்கு வியாபித்ததைத் தொடர்ந்து மலாய் சமுதாயத்தை அரவணைத்துக் கொண்டு உலக வரலாற்றில் தடம் பதித்தது.

இதனூடாக மலாய் மக்களின் தனித்துவ பண்பாட்டு விழுமியங்கள் இஸ்லாத்தின் சன்மார்க்க நெறிமுறைகளோடு இணைந்ததாக அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டது.

கலாநிதி  றமீஸ் அபூபக்கர் தமது நூலில் மலாய் சமூகத்தவருடைய இனத்துவ அடையா ளத்துடன் அவர்கள் மத்தியில் எழுந்த அச்ச உணர்வுகளையும் அவற்றின் வெளிப்பாடுக ளையும் மிகவும் துல்லியமாகவும், நயமாகவும் கையாண்டிருப்பது சிலாகித்துக் கூறத்தக்கது.


காலப்போக்கில் முஸ்லிம்களில் பல பிரிவினர் தோற்றம் பெற்றதுபோல மலாய் சமூகத்திற்குள்ளும் அவர்கள் வாழ்ந்த நாடுகளின் கலாசாரத்திற்கும் இனத்திற்கும் ஏற்ப சில வேறுபாடுகள் காணப்படலாயின.

குறிப்பாக, மலாய் சமூகத்தினரில் ஒரு சாரார் வேற்றுமத கலாசாரங்களை பின்பற்றுவோருடன் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதால் அவர்க
ளது குடும்ப வாழ்வில் கலப்புத் திருமணத்தின் விளைவாக சில உறவு  முறை சிக்கல்கள் தோன்றக்கூடிய அச்ச உணர் வுக்கு வழிவகுத்தது.

இதற்கு அப்பால் மலாய் மக்கள் அரசியலிலும் ஈடுபட்டனர். இப்பொழுது இலங் கையைப் பொறுத்தவரை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளூராட்சி சபைகளிலிருந்து பல்வேறு மட்டங்களிலும் வலியுறுத்தப்படுகின்ற சூழ்நிலையில் மலாய் பெண்களும் அரசியல் செயல்பாட்டாளர்களாக செயற்பட முன்வர வேண்டியது காலத்தின் தேவையாகும்.

ஆயினும், அபிவிருத்தி அடைந்த நாடுகளில் போன்று மூன்றாம் உலக நாடுகளில் பெண்களின் அரசியல் ஈடுபாடு குறை வாகவே காணப்படுகின்றது.

வன்செயல்கள் தலைதூக்குவதால் பெண்கள் இயல்பாகவே அரசியலில் ஈடுபடுவதில் பின்னடைவு ஏற்பட் டிருக்கின்றது.

எனவே அவர்கள் மத்தியில் சரியான புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாகும் என்றார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் வான் ஸெய்த் வான் அப்துல்லாஹ் அதிதியாகக் கலந்து கொண்டதோடு, களனி பல்கலைக்கழ ஆங்கில கற்கைப்பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரொமோலா ரசூல் நூலாய்வு செய்தார்.

முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரி.கே.அசூர், புரவலர் ஹாசிம் உமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் படம் :
Image may contain: 6 people, people standing
Image may contain: 5 people
மலாய் பெண்களும் இலங்கை அரசியலில் செயல்பட வேண்டும். இது காலத்தின் தேவை. மலாய் பெண்களும் இலங்கை அரசியலில் செயல்பட வேண்டும். இது காலத்தின் தேவை. Reviewed by Madawala News on 12/02/2017 02:43:00 PM Rating: 5