Yahya

ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழ்ந்த இடங்களில் பாரிய மனிதப் புதைகுழி.


மியான்மாரின் வடக்குப் பகுதி மாநிலமான ராக்கைனிலுள்ள, ரோஹிங்கிய மக்கள்  பெரும்பான்மையாக வாழ்ந்த கிராமமொன்றில், பாரிய மனிதப் புதைகுழியொன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும், அதிலிருந்து 10 சடலங்களை மீட்டுள்ளதாகவும், மியான்மார் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இன் டின் என்ற அக்கிராமத்திலிருந்து மீட்கப்பட்ட இச்சடலங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதன் பின்னணியைக் கண்டுபிடிக்க முயல்வதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இந்தப் புதைகுழிக்குப் பின்னால், பாதுகாப்புப் படையினர் காணப்பட்டனர் என்றால், பொறுப்பான பாதுகாப்புப் படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத்தினர் குறிப்பிட்டனர்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அதிகாரியொருவர், மீட்கப்பட்ட சடலங்கள், உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதால், அண்மையில் நடந்த வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களாக இவை இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவித்தார். அத்தோடு, எலும்புக்கூடுகள் என்ற ரீதியிலேயே அவை காணப்படும் நிலையில், யார் இறந்தார்கள் என்பதை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை என்றும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.
ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழ்ந்த இடங்களில் பாரிய மனிதப் புதைகுழி. ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழ்ந்த இடங்களில் பாரிய மனிதப் புதைகுழி. Reviewed by Madawala News on 12/22/2017 11:12:00 AM Rating: 5