Yahya

உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம். தகவல் தேடுகிறது போலீஸ்.



மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று 
பிரதேச செயலாளர்
பிரிவில் கும்புறுமூலை கிராம சேவகர் பிரிவில் கும்புறுமூலை வெம்பு காட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலத்தினை அடையாளம் கான்பதற்கான தகவல்களை வாழைச்சேனை பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.


கடந்த 21.12.2017 அன்று கும்புறுமூலை வெம்பு காட்டுப்பகுதியி;ல் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் கிடப்பதாக கிராம சேவகர் எஸ்.அறியக்குட்டி மூலம் கிடைத்த தகவலையடுத்து அவ்விடத்திற்குச் சென்ற வாழைச்சேனை பொலிஸார் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காகவும் மரணமடைந்தவர் யார் என்று அடையாளம் கானும்வரை பாதுகாப்பாக வைப்பதற்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.


கண்டெடுக்கப்பட்டுள்ள சடலம் பத்து நாட்களுக்கு முதல் இறந்திருக்கலாம் என்றும் இவர் நீள நிறத்தில் கருப்பு கோடிட்ட சாரம் அணிந்திருப்பதாகவும் மீசை கட்டையாக வெட்டப்பட்டுள்ளதுடன் மெல்லிய தாடி வைத்திருப்பதாகவும் இவருக்கு ஐம்பது வயது மதிக்கத்தக்கவராக உள்ளார் என்றும் வாழைச்சேனை குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எல்.ஏ.விமலரத்ன தெரிவித்தார்.


மரணமடைந்தவரின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடனோ அல்லது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் நேரடியாகவோ அல்லது 0652257709 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.




உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம். தகவல் தேடுகிறது போலீஸ். உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம். தகவல் தேடுகிறது போலீஸ். Reviewed by Euro Fashions on 12/26/2017 06:27:00 PM Rating: 5