Kidny

Kidny

அந்தமான் கடல் பகுதியில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை. புயலாக மாற வாய்ப்பு.


வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் காரணமாக இலங்கை
உற்பட தமிழ்நாட்டின்  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில்    ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டபடி ஒகி புயல், தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவை நோக்கி செல்கிறது. இதனால்  புயல் ஆபத்து நீங்கியது. 


பலத்த காற்றுடன் பெய்த கனமழையால்  இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயல் சின்னமாகவும் மாற வாய்ப்பு உள்ளது. 


‘சாகர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த புயல் சின்னம் வடமேற்கு திசையில் சென்னையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் வலுப்பெற்று நகர்ந்து சென்று லட்சத்தீவு பகுதியில் உள்ள அமினித்தீவுக்கு தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு உள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) லட்சத்தீவை கடந்து செல்லும்.

புயலின் தலைப்பகுதி தற்போது லட்சத்தீவு அருகே இருந்தபோதிலும் அதன் வால் பகுதி தமிழகத்தை ஒட்டிய பகுதியில் இருக்கிறது. அதன் தன்மை குறித்து மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது.

இதற்கிடையே தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி 2-ந் தேதி (இன்று) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அது புயல்சின்னமாக வலுப்பெற்று வருகிற 4-ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்யும்.
அந்தமான் கடல் பகுதியில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை. புயலாக மாற வாய்ப்பு. அந்தமான் கடல் பகுதியில் புதிதாக உருவான  காற்றழுத்த தாழ்வு நிலை. புயலாக மாற வாய்ப்பு. Reviewed by Madawala News on 12/02/2017 09:17:00 AM Rating: 5