Yahya

மடவளை மதீனா மாணவி பாத்திமா சமீஹா இக்பால் விஞ்ஞான பிரிவில் மிகச்சிறந்த பெறுபேறு.


நடைபெற்று முடிந்த 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.


அதன்படி மடவளை பசார் மதீனா தேசிய பாடசாலை மாணவி பாத்திமா சமீஹா இக்பால்  உயிரியல் விஞ்ஞான பிரிவில்  (Biological Sc) மிகச்சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமையை தேடித் தந்துள்ளார்.

குறிப்பிட்ட மாணவி  மூன்று பாடங்களிலும் A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், அவரின் Z புள்ளி 2.3018 ஆகும். மாவட்ட மட்டத்தில் 11 ஆவது இடத்தையும், தேசிய அளவில் 101 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

மடவளை பஸார் ஹப்புகஸ்தன்ன பிரதேசத்தை சேர்ந்த இவர் சாதாரன தர பரீட்சையிலும் 9 A எடுத்தவர் என்பதும். மடவளை பஸார் Dr. சஹீர் அவர்களின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருக்கு மடவளை மதீனா  பாடசாலை அதிபர் ஜனாப் அசீஸ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
மடவளை மதீனா மாணவி பாத்திமா சமீஹா இக்பால் விஞ்ஞான பிரிவில் மிகச்சிறந்த பெறுபேறு. மடவளை மதீனா மாணவி பாத்திமா சமீஹா இக்பால்  விஞ்ஞான பிரிவில் மிகச்சிறந்த பெறுபேறு. Reviewed by Madawala News on 12/28/2017 09:16:00 AM Rating: 5