Yahya

தனது குடும்­பத்தை சேர்ந்த ஒரு­வரை தலை­மைக்கு கொண்­டு­வ­ரவே மஹிந்த முயற்­சிக்­கிறார். இம்முறை நாம் பெரும் வெற்றி பெறுவோம். SB


(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியும் கூட்டு எதி­ர­ணியும் இணைந்து செயற்­பட இரு தரப்­பி­னரும் முயற்­சித்­த­போதும் அதனை ராஜ­பக் ஷவி­னரே தடுத்­தனர். மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு தனது குடும்­பத்தை

சேர்ந்த ஒரு­வரை கட்­சியின் தலை­மைத்­து­வத்­துக்கு கொண்­டு­வ­ரு­வதே நோக்­க­மாகும் என சமூ­க­வ­லு­வூட்டல் மற்றும் நலன்­புரி அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் நட­வ­டிக்கை தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் விசேட செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று சமூ­க­வ­லு­வூட்டல் நலன்­புரி அமைச்சில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் பூர்த்­தி­செய்­யப்­பட்­டுள்­ளன. தேர்­தலில் எங்­க­ளுடன் இணைந்து போட்­டி­யிட கட்­சியில் இருந்து பிரிந்து செயற்­படும் மஹிந்த ராஜபக்ஷ் தலை­மை­யி­லான அணி­யி­ன­ருடன் பல சுற்று பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டோம். இந்த பேச்­சு­வார்த்­தை­களின் போது எங்­க­ளுக்­கு­போன்று மஹிந்த ராஜபக்ஷ் தலை­மையில் இருக்கும் எமது உறுப்­பி­னர்­க­ளுக்கும் இரு தரப்­பி­னரும் இணைந்து செயற்­ப­ட­வேண்டும் என்ற ஆர்வம் இருப்­பதை அவ­தா­னிக்க முடிந்­தது.

என்­றாலும் இரண்­டு­த­ரப்­பி­னரும் இணைந்து செயற்­ப­டு­வதை பசில் ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் நாமல் ராஜபக்ஷ் ஆகி­யோரே தடுத்­தனர். பசில் ராஜபக்ஷ் அவ­ரது பாது­காப்பை கருத்­திற்­கொண்டும் மஹிந்த ராஜபக்ஷ் தனது குடும்­பத்தில் ஒருவர் இந்த கட்­சியில் தலை­மைத்­து­வத்­துக்கு வந்து நாட்டின் தலை­வ­ராக வேண்டும் என் திட்­டத்தின் நோக்­கத்­திலும் இணைந்து செயற்­பட மறுத்­த­தாக எமக்கு தெரி­ய­வ­ரு­கின்­றது.

இவர்­களின் இந்த தீர்­மா­னத்­தினால் கட்­சியில் இருக்கும் பலர் மிகவும் விரக்­தி­ய­டைந்­தி­ருக்­கின்­றனர். அவர்­க­ளுடன் நாங்கள் தொடர்ந்து பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டு செல்­கின்றோம். எதிர்­வரும் தினங்­களில் அவர்­களில் சிலர் எங்­க­ளுடன் இணைந்­து­கொள்ளும் வாய்ப்பு இருக்­கின்­றது.

அல்­லது தேர்­த­லுக்கு பின்னர் இணைந்­து­கொள்­வார்கள் என்ற நம்­பிக்கை எங்­க­ளுக்கு இருக்­கின்­றது.அதனால் நாங்கள் மிகவும் உறு­தி­யு­டனே இந்த தேர்­த­லுக்கு முகம்­கொ­டுக்­க­வி­ருக்­கின்றோம்.

அத்­துடன் மஹிந்த ராஜபக்ஷ் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இருந்து பிரிந்து சென்று மொட்டு சின்­னத்தில் கட்சி அமைத்­தி­ருப்­பது எங்­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்தை ஆரம்­பிப்­ப­தற்­காகும். என்­றாலும் கட்சி ஆத­ர­வா­ளர்கள் தற்­போது இந்த நிலையை உணர்ந்து வரு­கின்­றனர்.

அதனால் கடந்த காலத்தில் பாரிய குற்­றச்­செ­யல்­க­ளுடன் தொடர்ப்­பு­பட்­ட­வர்­க­ளைத்­த­விர மற்­ற­வர்கள் இரு­த­ரப்­பி­னரும் இணைந்து செயற்­ப­ட­வேண்டும் என்ற எண்­ணத்­தி­லேயே இருக்­கின்­றனர்.

அத்­துடன் தேர்­த­லுக்கு வேட்­பு­மனு தாக்­கல்­செய்­து­வரும் இந்­நி­லை­யிலும் பலர் எங்­க­ளுடன் தொடர்­பு­கொண்டு தேர்­தலில் போட்­டி­யிட விருப்பம் தெரி­விக்­கின்­றனர். நாடு பூரா­கவும் இந்த நிலையை நாங்கள் காணு­கின்றோம். அத்­துடன் ஜனா­தி­பதி தேர்­தலில் அன்­னத்­துக்கு வாக்­க­ளித்த இட­து­சாரி கட்­சி­களும் ஜனா­தி­பதி மீது நம்­பிக்­கை­வைத்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­துள்­ளன. அதே­போன்று இம்­முறை தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி கை மற்றும் வெற்­றிலை சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­துடன் தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யாக இருக்கும் மலை­ய­கத்தில் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் சேவல் சின்­னத்தில் எமது உறுப்­பி­னர்கள் போட்­டி­யி­ட­வுள்­ளனர். அதே­போன்று கிழக்கு மாகா­ணத்தில் அதா­வுல்­லாவின் கட்­சியில் எமது உறுப்­பி­னர்கள் போட்­டி­யி­ட­வுள்­ளனர்.

எனவே அன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் பங்காளிகளாக இருந்த பிரதான பல கட்சிகள் மீண்டும் எம்முடன் இணைந்து செயற்படமுன்வந்துள்ளன. அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷ்வுடன் இருக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைந்துள்ளனர். அதனால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மிகவும் உறுதியுடன் போட்டியிட்டு வெற்றிபெரும் நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றார்.
தனது குடும்­பத்தை சேர்ந்த ஒரு­வரை தலை­மைக்கு கொண்­டு­வ­ரவே மஹிந்த முயற்­சிக்­கிறார். இம்முறை நாம் பெரும் வெற்றி பெறுவோம். SB தனது குடும்­பத்தை சேர்ந்த ஒரு­வரை தலை­மைக்கு கொண்­டு­வ­ரவே மஹிந்த முயற்­சிக்­கிறார். இம்முறை நாம் பெரும் வெற்றி பெறுவோம். SB Reviewed by Madawala News on 12/14/2017 12:13:00 PM Rating: 5