Kidny

Kidny

சுகவீனமுற்றுள்ள சகோதரர் ஷிப்லி பாரூக் அவர்களின் சுகத்துக்காக பிரார்த்திக்க வேண்டுகோள்.



 முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி அமைப்பாளரும்,
முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினரும், பொறியியலாளருமான  சகோதரர் ஷிப்லி பாரூக் அவர்கள் கடந்த இரண்டொரு தினங்களாக காய்ச்சலால் 

சுகவீனமுற்று ஒரு நாள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார், மேலும் உடல்நிலை தேர்ச்சியடைய எல்லாம்வல்ல அழ்ழாஹ்விடம் பிரார்த்திப்போம்.

தற்போதைய முஸ்லிம் அரசியலை தனது தூரநோக்கு சிந்தனைகளூடாக புதியதோர்  அரசியல் கலாசாரம் ஒன்றின்பக்கம் கொண்டுசெல்வதில்  இளம் தலைமுறையினரிடம் இவரது செயல்பாடுகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது தெரிந்ததே.  

எப்போதும் தனது அரசியல் செயல்பாடுகளை நேர்மை,கண்ணியம் ,பணிவு ஆகிய மூன்று நற்குணங்களின் அடிப்படையில்  விளம்பரமின்றி அமைதியாக மேற்கொண்டு மக்கள் மனங்களை வென்ற ஒரு தலைவனின் தொடர்ச்சியான அரசியல் பயணத்துக்கு "சுகவீனம்" தற்காலிக ஓய்வைக் கொடுத்திருக்கிறது

அவருக்கு ஏற்பட்டுள்ள உடல் சுகவீனம் முழுமையாக குணமடைந்து விரைவில் இயல்புநிலைக்குத் திரும்பவும்,
 தொடக்கிவைத்துள்ள   புதிய அரசியல் பயணம் நீண்டதூரம் சென்று முழுமுஸ்லிம் சமூகத்தினதும் உள்ளங்களை உசுப்பிவிடவேண்டுமென்றும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.

தகவல்: Feroz Mohamed 
Kattankudy.
சுகவீனமுற்றுள்ள சகோதரர் ஷிப்லி பாரூக் அவர்களின் சுகத்துக்காக பிரார்த்திக்க வேண்டுகோள். சுகவீனமுற்றுள்ள சகோதரர் ஷிப்லி பாரூக் அவர்களின் சுகத்துக்காக பிரார்த்திக்க வேண்டுகோள். Reviewed by Madawala News on 12/01/2017 08:26:00 PM Rating: 5