Yahya

கட்டுநாயக்காவில் இறங்கிய இலங்கையரின் 10 கோடி பெராரி.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிசொகுசு வாகனம் ஒன்று வந்திறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையின் பிரபல எவென்ரா ஹோட்டல் நிறுவனத்தினால் இந்த மோட்டார் வாகனம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பெராரி 488 Spyder என அழைக்கப்படுகின்ற வாகனமே இவ்வாறு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரகத்திலான இந்த மோட்டார் வாகனம் 10 நொடியில் 100 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக் கூடியது என குறிப்பிடப்படுகின்றது.

இந்த வாகனத்தின் வரியுடன் கூடிய விலை 10 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் லெம்போகினி கார் தொடர்பான தகவல்கள் பெரிதும் பேசப்பட்டன. இந்நிலையில் புதிய கார் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுநாயக்காவில் இறங்கிய இலங்கையரின் 10 கோடி பெராரி. கட்டுநாயக்காவில் இறங்கிய இலங்கையரின் 10 கோடி பெராரி. Reviewed by Madawala News on 12/27/2017 02:38:00 PM Rating: 5