Kidny

Kidny

சீரற்ற கால­நி­லை­யினால் உயி­ரி­ழந்த மீன­வர்களின் குடும்­பங்­க­ளுக்கு இரு­பது இலட்சம் ரூபா நஷ்­ட­ஈடு. அமைச்சு அறிவிப்பு.


சீரற்ற கால­நி­லை­யினால் உயி­ரி­ழந்த மீன­வர் களின் குடும்­பங்­க­ளுக்கு இரு­பது இலட்சம் ரூபா நஷ்­ட­ஈட்டுத்
தொகை கிடைக்­க­வுள்­ள­தாக கடற்­றொழில் மற்றும் நீரியல் வளத்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்­தார்.

உயி­ரி­ழந்த மீன­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு சகல பிர­ஜை­க­ளுக்­கு­மான காப்­பு­றுதித் திட்­டத்தின் கீழ் தேசிய காப்­பு­றுதி நிதி­யத்­தி­னூ­டாக பத்து இலட்சம் ரூபாவை வழங்­கு­வ­தற்கு

 அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. அத்­துடன் கடற்­றொழில் மற்றும் நீரியல் வளத்­துறை அமைச்சு மற்றும் காப்­பு­றுதி நிறு­வ­னங்கள் மீன­வர்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள காப்­புறுதி மூலம் மேலும் பத்து லட்சம் ரூபாவும் உயி­ரி­ழந்த மீன­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

இதே­வேளை சீரற்ற கால­நி­லை­யினால் ஐந்து மீனவப் பட­குகள் முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் மீனவத்துறை­மு­கங்­க­ளுக்குள் நங்­கூ­ர­மி­டப்­பட்­டி­ருந்த மேலும் சில படகுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
சீரற்ற கால­நி­லை­யினால் உயி­ரி­ழந்த மீன­வர்களின் குடும்­பங்­க­ளுக்கு இரு­பது இலட்சம் ரூபா நஷ்­ட­ஈடு. அமைச்சு அறிவிப்பு. சீரற்ற கால­நி­லை­யினால் உயி­ரி­ழந்த மீன­வர்களின் குடும்­பங்­க­ளுக்கு இரு­பது இலட்சம் ரூபா நஷ்­ட­ஈடு. அமைச்சு அறிவிப்பு. Reviewed by Madawala News on 12/02/2017 11:54:00 AM Rating: 5