Yahya

புகையிரத தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பு ஸ்ட்ரைக்கை ஆரம்பித்தது.


கடந்த தினத்தில் முன்னெடுக்கப்பட்ட புகையிரத  இயந்திர சாரதிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்காத , புகையிரத தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒருவாரகாலமாக முன்னெடுக்கப்பட்ட புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு நேற்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

தமது வேதன முரண்பாடு தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைப்பதாக அமைச்சரவை உப குழு வழங்கிய உறுதிமொழிக்கு அமைய பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவதாக புகையிரத தொழிற்சங்கம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , குறித்த பணிப்புறக்கணிப்பில் பங்கேற்காத , புகையிரத தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பு தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புகையிரத தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பு ஸ்ட்ரைக்கை ஆரம்பித்தது. புகையிரத தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பு ஸ்ட்ரைக்கை ஆரம்பித்தது. Reviewed by Madawala News on 12/14/2017 10:24:00 AM Rating: 5