Yahya

இலங்கையின் தேயிலையை ரஷ்யா தடை விதித்த பின்னணி இதுதான்.. !


எதிர்வரும் 2018 ஜனவரி தொடக்கம் ஆஸ்பெஸ்டாஸ் பாவனையை முற்றாகத் தடை செய்வதற்கு இலங்கை அரசு தீர்மானித்திருந்தது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும்.

இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது 2015இல். ஜனாதிபதி மைத்ரி ஆட்சிக்கு வந்து ஓரிரு மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட சுற்றுப்புறச்சூழல் தொடர்பான முக்கியமான கொள்கைத் தீர்மானம் இது.


இத்தனை நாள் கழித்து இந்தத் தீர்மானத்துக்கு எதிர்வினையாற்றியிருக்கிறது ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தியில் முதலிடம்  வகிக்கும் ரஷ்யா.


ஆம். ஆஸ்பெஸ்டாஸ் தடைக்கு பதிலடியாகத்தான் இலங்கைத் தேயிலைக்கு ரஷ்யாவில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. என்பது எனது தீர்மானம்.


சிறிய நாடுகள் என்னதான் சூழல் பாதுகாப்பு, நிலைபேறான அபிவிருத்தி என்றெல்லாம் அறைகூவல் விடுத்து புரட்சிகரமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முனைந்தாலும் பெரியண்ணன் மனோபாவம் கொண்ட வல்லரசுகள் அவற்றுக்கு செக்மேட் வைத்து கருவறுக்கும் என்பதற்கு இது இன்னுமொரு சான்று.


*உலகின் மொத்த ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தியில் 55% ரஷ்யாவில்தான் உற்பத்தி செய்யப் படுகிறது. ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தியின் கேந்திர நிலையமாகத் திகழும் ரஷ்யத் தொழில் நகரின் பெயர் ஆஸ்பெஸ்ட் (Asbest) என்பது குறிப்பிடத்தக்கது.

- ரிம்சான் அமானுல்லாஹ்-
இலங்கையின் தேயிலையை ரஷ்யா தடை விதித்த பின்னணி இதுதான்.. ! இலங்கையின் தேயிலையை ரஷ்யா தடை விதித்த பின்னணி இதுதான்.. ! Reviewed by Madawala News on 12/17/2017 09:32:00 PM Rating: 5