Yahya

கலந்துரையாடல் சக்சஸ்... இலங்கையின் தேயிலை தடையை ரஷ்யா நீக்கியது.


இலங்கையிலிருந்த இறக்குமதி செய்யப்படும் தேயிலை மீது ரஷ்யா விதித்துள்ள தற்காலிக தடையானது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 30ஆம் திகதியிலிருந்து இந்தத் தடை நீக்கம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிகாரிகளுடன் இன்று மேற்கொண்ட கலந்துரையாடலையடுத்​தே இந்தத் தடைநீக்கம் குறித்து தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா இலங்கையிலிருந்து இறக்குமதி செய்த தேயிலையில் கெப்ரா என்ற வண்டு ஒன்று இருந்ததாகத் தெரிவித்து இம்மாதம் 18ஆம் திகதியிலிருந்து இலங்கைத் தேயிலை இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலந்துரையாடல் சக்சஸ்... இலங்கையின் தேயிலை தடையை ரஷ்யா நீக்கியது. கலந்துரையாடல் சக்சஸ்... இலங்கையின் தேயிலை தடையை ரஷ்யா நீக்கியது. Reviewed by Madawala News on 12/25/2017 05:04:00 PM Rating: 5