Yahya

ஜெரூசலம் விவகாரத்தில் அமேரிக்காவின் தீர்மானத்தை எதிர்க்கும் நாடுகளின் நிதி உதவிகளை நிறுத்துவேன் : ட்ரம்ப் tm



ஜெருசலேமை இஸ்ரேலிய தலைநகராக ஒருதலைபட்சமாக அமேரிக்கா அறிவித்ததை கண்டித்து
, அந்த அறிவிப்பை தடை செய்யும்  பிரேரணை ஐநாவின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்டது.


 பாதுகாப்பு சபையில் இருக்கும் 15 நாடுகளில் 14 நாடுகள் இந்த கண்டன பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. 

அமேரிக்கா மட்டும் எதிர்த்து வாக்களித்தது மட்டுமல்லாது வீட்டோவை பாவித்து 
பிரேரணையை தடை செய்தது.


அமேரிக்கா தனது நாட்டுக்கு சார்பாக இதுவரை 36 தடவைகளே வீட்டோவை பாவித்திருக்கிறது. ஆனால் இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா இதுவரை 43 தடவைகள் வீட்டோவை பாவித்திருக்கிறது. அதாவது தனது நாட்டு நலனை விட இஸ்ரேலுக்கு அமேரிக்கா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது இதில் இருந்து புலனாகிறது.  அதேநேரம்  ஏனைய வீட்டோ அதிகார நாடுகளான சீனா 11 தடவையும் , பிரான்ஸ் 16 தடவையும், பிரிட்டன் 29 தடவையும் ரஷ்யா  106 தடவையும் வீட்டோ அதிகாரத்தை பாவித்திருக்கின்றன.


 இந்த கணக்கில் பார்க்கும் போது வீட்டோ அதிகாரமுள்ள ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுக்கு சார்பாகவே ஐநா பாதுகாப்பு சபையில் அதிக வீட்டோக்கள் பாவிக்கப்பட்டிருக்கின்றன. ஐநா மீளமைக்கப்படவேண்டும் (UN Reformation) மற்றும் வீட்டோ அதிகாரத்தை ஒன்றில்  ஐநாவில் இருந்து அகற்ற வேண்டும் அல்லது உலகின் அனைத்து மக்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் பரவலாக்கப்படவேண்டும்  என்று பல சர்வதேச அமைப்புக்கள் போராடி வருகின்றன. 


இவ்வகையான சர்வதேச சட்ட ஒழுங்குகளை மீறும் தான்தோன்றித்தனமான நாடுகளின்   நடவடிக்கைகளும் அவர்களின் கோரிக்கையை முன்வைப்பதற்குரிய  காரணங்களில் ஒன்று. 

ஜெருசலேம் விடயத்தில் இதுவரை உலகின் எந்தவொரு நாடும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. ஆனாலும் தனது தீர்மானத்துக்கு எதிரான நாடுகளுக்கான நிதிஉதவியை நிறுத்தபோவதாக அமேரிக்கா எச்சரித்து இருப்பது மிகவும் வேடிக்கையான ஒன்றாகும். 

ஏனெனில் ஐநாவுக்கு கொடுக்கவேண்டிய 3 பில்லியன் அமேரிக்கா டாலர் கடன் இதுவரை அமேரிக்கா செலுத்தவில்லை. ஐநா விற்கான கடனையே இன்னும் திருப்பி செலுத்தாத அமெரிக்கா, ஐநா தீர்மானத்துக்கு ஆதரவாக இருந்தால், நிதியுதவி தரமேட்டேன் என்று அடம்பிடிப்பதற்கு ட்ரம்ப் போன்ற முட்டாள்களால்தான் முடியும்.

தில்ஷான் முகம்மத்-
ஜெரூசலம் விவகாரத்தில் அமேரிக்காவின் தீர்மானத்தை எதிர்க்கும் நாடுகளின் நிதி உதவிகளை நிறுத்துவேன் : ட்ரம்ப் tm ஜெரூசலம் விவகாரத்தில் அமேரிக்காவின் தீர்மானத்தை எதிர்க்கும் நாடுகளின் நிதி உதவிகளை நிறுத்துவேன் : ட்ரம்ப் tm Reviewed by Euro Fashions on 12/21/2017 12:55:00 PM Rating: 5