Yahya

டீசல் பவுஸர் மதகில் மோதி விபத்து. இருவர் காயம். #திருகோணமலை


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

அநூராத புரத்தில் இருந்து   திருகோணமலை   சீனக்குடா பிரதேசத்திற்கு  ஐ.ஓ.சி க்கு  டீசல்  ஏற்ற வருகை  தந்த  பவுஸர் ஒன்று நேற்று (24) ஞாயிற்று கிழமை காலை கன்னியா வீதி 152 மைல் கல்லில் 155/2 மதகில் மோதி விபத்துக்குள்ளானதாக திருகோணமலை துறை முகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் இதன் சாரதியும், உதவியாலளரும், படு காயமடைந்துள்ளதோடு திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த சேதமடைந்துள்ளதாகவும் , நித்திரை காரணமாகவே இவ் விபத்து இடம் பெற்றிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக திருகோணமலை துறை முகப் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

டீசல் பவுஸர் மதகில் மோதி விபத்து. இருவர் காயம். #திருகோணமலை டீசல் பவுஸர் மதகில் மோதி விபத்து. இருவர் காயம். #திருகோணமலை Reviewed by Madawala News on 12/25/2017 09:10:00 AM Rating: 5